உங்கள் வீட்டு பூஜை அறை கோயிலாக மாறணுமா? கட்டாயம் வைத்திருக்க வேண்டிய 17 பொருட்கள்..!!

Poojai 2026 1

இந்து தர்ம மரபில் ஒவ்வொரு இல்லத்திலும் உள்ள பூஜை அறை என்பது கோயிலின் கருவறைக்கு நிகரான புனித தலமாக கருதப்படுகிறது. அங்கு நிலவும் தெய்வீக அதிர்வுகளே இல்லத்தில் அமைதியையும் நேர்மறை ஆற்றலையும் நிலைநிறுத்துகின்றன. அந்த வகையில், பூஜை அறையில் இறைவனின் பரிபூரண அருளையும் மங்களகரமான சூழ்நிலையையும் ஈர்க்கக்கூடிய சில வழிபாட்டு மங்களப் பொருட்கள் குறித்து ஆன்மிக நூல்களும் சாஸ்திரங்களும் விரிவாக கூறுகின்றன.


இறை வழிபாட்டில் மங்களத்தின் அடையாளமாக திகழும் மஞ்சள் கலந்த ‘அட்சதை’ மற்றும் முப்பத்து முக்கோடி தேவர்களின் உறைவிடமாக கருதப்படும் ‘கோமாதா படம்’ ஆகியவை பூஜை அறையில் இடம்பெறுவது மிகுந்த சுப பலன்களை தரும். அதேபோல், லட்சுமி கடாட்சத்தை ஈர்க்கும் ‘சோழிகள்’, மன அமைதியையும் ஆன்மிக மேன்மையையும் உணர்த்தும் ‘தாமரை மணி விதைகள்’, துஷ்ட சக்திகளையும் எதிர்மறை ஆற்றலையும் விரட்டி நேர்மறை அதிர்வுகளை உருவாக்கும் ‘பூஜை மணி’ மற்றும் வைணவ வழிபாட்டில் அளப்பரிய புனிதம் வாய்ந்த ‘சாளக்கிராமம்’ ஆகியவை இல்லத்தின் ஆன்மிக மதிப்பை உயர்த்துகின்றன.

நறுமணமும் தெய்வீக ஈர்ப்பும் கொண்ட ‘பச்சை கற்பூரம்’, வேத சடங்குகளில் பிரதான அங்கம் வகிக்கும் ஆற்றல் வாய்ந்த ‘தர்ப்பைப் புல்’ மற்றும் மகாவிஷ்ணுவின் திருக்கரங்களில் திகழும் மங்களச் சின்னமான ‘வலம்புரிச் சங்கு’ ஆகியவை வழிபாட்டு அறையைத் தூய்மைப்படுத்துகின்றன. இறைவனுக்கு நைவேத்தியமாகப் படைக்கப்படும் பால், தயிர், தேன், நெய், சர்க்கரை சேர்ந்த ‘பஞ்சாமிர்தக் கலவை பொருட்கள்’, கிருஷ்ண பரமாத்மாவையும் முருகப் பெருமானையும் நினைவூட்டி கண் திருஷ்டியைப் போக்கும் ‘மயில் இறகு’ மற்றும் மனித வாழ்வின் கடமைகளையும் தத்துவங்களையும் போதிக்கும் வாழ்க்கை வழிகாட்டியான ‘பகவத் கீதை’ நூல் ஆகியவை இடம் பெறுவது தனிச் சிறப்பை அளிக்கும்.

மேலும், மங்களம் மற்றும் செழிப்பின் குறியீடான ‘பச்சை வளையல்கள்’, ஆன்மிகப் பாரம்பரியத்தில் மதிப்புமிக்க ‘குண்டுமணி விதைகள்’ (குன்றிமணி), இறைவனுக்குக் குளிர்ச்சியையும் நறுமணத்தையும் அளிக்கக் காலம் காலமாகப் பயன்படுத்தப்படும் ‘சந்தனக் கட்டை’ மற்றும் நாளும் மந்திரங்களை முறையாக உச்சரித்துத் தியானிக்க உதவும் ‘ஜெபமாலை / மந்திர நூல்’ ஆகியவையும் மங்களகரமான கூறுகளாகக் கருதப்படுகின்றன.

இந்த 17 பொருட்களும் அனைவரது வீடுகளிலும் கட்டாயம் முழுமையாக இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை என்றாலும், இவற்றில் தங்களால் இயன்ற மங்களப் பொருட்களைத் தூய்மையுடன் சேகரித்து வைத்துப் பூஜித்து வரும்போது, அந்த இல்லத்தில் தெய்வ கடாட்சம் தழைத்தோங்கி சுபிட்சம் உண்டாகும் என்பது நம்பிக்கையாகும்.

Read More : முதல்வரின் கோரிக்கையை நிராகரிக்கணும்..!! இடைத்தேர்தல் வழக்கில் தேர்தல் ஆணையம் அதிரடி..!! ஐகோர்ட்டில் காரசார வாதம்..!!

Next Post

அக்டோபரில் கொட்டப்போகும் யோகம்..! இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும்..! யாருக்கு என்ன பலன்?

Wed Sep 30 , 2026
நவகிரகங்களின் தொடர் பெயர்ச்சிகள் மனித வாழ்வில் அவ்வப்போது எதிர்பாராத மாற்றங்களையும் திருப்புமுனைகளையும் உருவாக்குவது வழக்கம். அந்த வகையில், அக்டோபர் மாதம் தொடங்கும் வேளையில் நிகழ உள்ள முக்கிய கிரகங்களின் சஞ்சார நிலைகள், சில ராசிகளுக்கு அளப்பரிய தனயோகத்தை உருவாக்கவிருக்கின்றன. ஜோதிட சாஸ்திர விதிகளின்படி, ஜாதகத்தில் 2-ம் பாவம் (தன ஸ்தானம்), 5-ம் பாவம் (பூர்வ புண்ணியம்), 9-ம் பாவம் (பாக்கிய ஸ்தானம்) மற்றும் 11-ம் பாவம் (லாப ஸ்தானம்) ஆகியவற்றுடன் […]
Astro 2026 e1788532865623

You May Like