மதுராந்தகம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கும் விதமாகவும் தேர்தல் அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்யவும், செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை முழுமையாக மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
மதுராந்தகம் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் அக்டோபர் 6-ஆம் தேதியும், பதிவான வாக்குகள் எண்ணும் பணி அக்டோபர் 9-ஆம் தேதியும் நடைபெற உள்ளன. தேர்தல் அமைதியான சூழலில் வன்முறைகளின்றி நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் உள்ள அரசு டாஸ்மாக் கடைகள், அவற்றுடன் இயங்கும் பார்கள் மற்றும் தனியார் நட்சத்திர விடுதிகளில் உள்ள மதுபானக் கூடங்கள் அனைத்திற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை (அக். 4) காலை 10 மணி முதல் வாக்குப்பதிவு நாளான அக்டோபர் 6-ஆம் தேதி நள்ளிரவு வரை தொடர்ச்சியாக 3 நாட்களுக்கு மாவட்டம் முழுவதும் எவ்வித மது விற்பனையும் நடைபெற கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான அக்டோபர் 9-ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகள் மற்றும் தனியார் பார்கள் அனைத்தும் முழுமையாக மூடப்பட்டிருக்கும்.
உத்தரவை மீறி கள்ளச்சந்தையில் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தாலோ, சட்டவிரோதமாக பார்களை திறந்து வைத்திருந்தாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது குண்டர் சட்டம் உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் சட்ட நடவடிக்கை பாயும் என மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
Read More : எல் நினோ தாக்கம் குறைந்ததும் என்ன நடக்கும்? குட் நியூஸ் சொன்ன இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன்!


