நாமக்கல் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி போட்டியிடுகிறது. இதன் வேட்பாளராக எஸ்.சூரியமூர்த்திக்கு பதிலாக, வி.எஸ்.மாதேஸ்வரன் அறிவிக்கப்பட்டார். தாழ்த்தப்பட்ட சமூகத்தினரை பற்றி வேட்பாளர் சூரியமூர்த்தி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, கட்சி தலைமை வேட்பாளரை மாற்றி அறிவித்தது.
இந்நிலையில், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் மாதேஸ்வரன் அதிமுகவிடம் தனது வெற்றியை பறிகொடுக்க வாய்ப்புள்ளதாக திமுக தலைமைக்கு உளவுத்துறை ரகசிய ரிப்போர்ட் அளித்துள்ளதாம். எதிர்க்கட்சிகளை விட மாதேஸ்வரனின் சொந்தக் கட்சியினரே அவருக்கு எதிராக அதிகளவில் பரப்புரை செய்கிறார்களாம். இதன் பின்னணியில், சூரியமூர்த்தியின் சதி இருப்பதாக கூறப்படுகிறது.
Read More : பட்டாவில் பெயர் மாற்ற வேண்டுமா..? இனி உங்க வேலை ஈசியா முடிஞ்சிரும்..!! சூப்பர் அறிவிப்பு..!!