பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்ததில் 21 குழந்தைகள் உயிரிழப்பு!. ஆசிரியையும் பலியான சோகம்!. பாகிஸ்தானில் பயங்கரம்!

Pakistan school collapses 30kb

பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள அப்ரிதி அபாத் பகுதியில், தனியார் பள்ளி ஒன்றின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 21 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியை உட்பட குறைந்தது 22 பேர் உயிரிழந்தனர்; மேலும் 21 பேர் காயமடைந்தனர். உயிரிழந்த குழந்தைகளின் வயது 7 முதல் 12க்குள் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், காயமடைந்தவர்களில் 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக லேடி ரீடிங் மருத்துவமனை தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்களைக் காப்பாற்றும் நோக்கில் மருத்துவமனையில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர் இடிபாடுகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் அஞ்சப்படுவதால் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

1newsnationuser5

Next Post

இனி தெரியாத நம்பர்ல இருந்து கால் வந்தா பயப்பட தேவையில்லை!. நவம்பர் 1 முதல் புதிய விதி அமல்!. மத்திய அரசு அதிரடி!

Thu Oct 15 , 2026
இந்தியாவில் இனி தெரியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் வகையில், அனைத்து டெலிகாம் நிறுவனங்களுக்கும் ‘காலர் ஐடி’ (Caller ID) சேவையை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. வரும் நவம்பர் 1 முதல் இந்த புதிய விதி அமலுக்கு வருகிறது. டெலிகாம் துறை அமைச்சகத்தின் (DoT) உத்தரவின்படி, 4G மற்றும் 5G நெட்வொர்க்குகளைப் பயன்படுத்தும் அனைத்து மொபைல் பயனர்களுக்கும் ‘காலர் நேம் பிரசென்டேஷன்’ (CNAP) முறை தானாகவே செயற்படுத்தப்படும். […]
unknown callers 30kb

You May Like