டெல்லி மெட்ரோவில் ரூ.400-க்கு ரூமா? அதிர்ந்துபோன வெளிநாட்டு பெண்! உள்ளே என்னலாம் இருக்கு பாருங்க!

delhi metro 30kb

டெல்லி மெட்ரோ நிலையத்திற்குள்ளேயே வெறும் 400 ரூபாய்க்கு தங்கும் விடுதி செயல்பட்டு வருவது இணையத்தில் வைரலாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.


பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த பயணியான மியா நிகோல் (Mia Nicole) என்பவர் தனது தோழியுடன் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டபோது, பட்ஜெட் விலையில் தங்குமிடம் தேடியுள்ளார். அப்போது புது டெல்லி ரயில் நிலையத்திற்கு எதிரே உள்ள டெல்லி மெட்ரோ கட்டிடத்திற்குள் அமைந்துள்ள ‘மெட்ரோ ஸ்டே இப்போஸ்ட்’ (Metro Stay) என்ற விடுதியைக் கண்டறிந்து அங்கு தங்கியுள்ளார்.

https://www.instagram.com/reel/DeZo4EQuVf0/?utm_source=ig_embed&ig_rid=As_VfV1ZzfVUYUJn6u5KImf

இந்த அனுபவம் குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளதாவது, மெட்ரோ நிலையத்திற்குள் விடுதி இருப்பது ஆரம்பத்தில் தனக்கு மிகவும் விசித்திரமாகத் தோன்றியதாகவும், அதன் வெளிப்புறத் தோற்றம் பார்ப்பதற்கு நன்றாக இல்லாவிட்டாலும், உள்ளே அறைகள் மிகவும் சுத்தமாகவும் வசதியாகவும் இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு இரவுக்கு ஒரு நபருக்கு இந்திய மதிப்பில் வெறும் 400 ரூபாய் (சுமார் 4 பவுண்டுகள்) மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுவதாக அவர் வியப்புடன் தெரிவித்துள்ளார். படுக்கைக்கு அடியில் பெரிய லாக்கர் வசதியும், லக்கேஜ்களைப் பாதுகாக்க டிஜிட்டல் கீபேட் பூட்டு (Keypad lock) போன்ற நவீன பாதுகாப்பு வசதிகள் இருப்பதாகவும் அவர் பாராட்டியுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். “இவ்வளவு குறைந்த விலைக்கு இது மிகவும் அருமையான வசதி” என ஒரு தரப்பினர் வியந்தாலும், “மற்ற பயணிகளுடன் அறை பகிர்ந்து கொள்வது பாதுகாப்பானதா?” என்றும், “டெல்லியில் பாதுகாப்புடன் இருக்குமாறு” சிலரும் எச்சரித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

ரயில் மற்றும் மெட்ரோ நிலையங்களுக்கு மிக அருகில் அமைந்துள்ளதால், குறைந்த செலவில் பயணம் செய்யும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த விடுதி ஒரு சிறந்த பட்ஜெட் தேர்வாக அமைந்துள்ளது.

1newsnationuser5

Next Post

சுட்ட எண்ணெய்யை பயன்படுத்தினால் ஆபத்து?. 150-க்கும் மேற்பட்ட அறிவிப்புகள்; புதிய லேபிளிங் விதிகள்!. FSSAI கடும் நடவடிக்கை!.

Thu Oct 15 , 2026
வீட்டில் பொரிக்க பயன்படுத்திய எண்ணெய்யை 1,2 நாட்களுக்குள் பயன்படுத்திவிட வேண்டுமென FSSAI அறிவுறுத்தியுள்ளது. மீண்டும் மீண்டும் அதே எண்ணெய்யை சூடாக்கும் போது அதன் வேதியல் தன்மை மாறும் என்றும் எச்சரித்துள்ளது. அப்படி சமைப்பதால் புற்றுநோய் வருவதற்கான அபாயமும் உள்ளது. ஆகையால் முடிந்தவரை எண்ணெய்யை உடனுக்குடன் பயன்படுத்தி விடுவதே சிறந்தது என அறிவுறுத்தப்படுகிறது. இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) தனது கட்டுப்பாடுகளையும் கண்காணிப்பையும் தீவிரப்படுத்தியுள்ளதை அடுத்து, […]
Deep Fry Cooking Oil

You May Like