fbpx

பாரிஸ் ஒலிம்பிக்: தலைமை பொறுப்பிலிருந்து விலகிய மேரி கோம்!

ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும் இந்திய வீரர்களை வழி நடத்தும் தலைமை பொறுப்பிலிருந்து விலகுவதாக குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் அறிவித்துள்ளார். 

இந்தியாவின் சாதனை வீராங்கனையாக திகழ்பவர் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம்.  இவர் ஆறு முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனைப் படைத்தவர். ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும் இந்திய வீரர்களை வழிநடத்தும் தலைமை பொறுப்பில் பதவி வகித்தார். இந்நிலையில், தலைமை பொறுப்பிலிருந்து தன்னை விடுவிக்குமாறு இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் பி.டி. உஷாவிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில்,  “நாட்டுக்காக சேவை செய்வது எனக்குக் கிடைத்த பெருமை. நான் மனரீதியாக தயாராக இருந்தேன். இருந்தபோதும் மதிப்புமிக்க இந்தப் பொறுப்பை என்னால் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை. அதற்காக வருந்துகிறேன். தனிப்பட்ட காரணங்களினால் இந்த பொறுப்பிலிருந்து விலகுகிறேன்” என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பி.டி. உஷா கூறுகையில், “ஒலிம்பிக் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரரும், IOA தடகள ஆணையத்தின் தலைவருமான மேரி கோம் தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகியது எங்களுக்கு வருத்தமளிக்கிறது.  அவரது முடிவையும்,  அவரது தனியுரிமையையும் நாங்கள் மதிக்கிறோம்.  தகுந்த ஆலோசனைக்கு பிறகு மேரி கோமுக்கு பதிலாக பதவி வகிப்பவர் குறித்து அறிவிக்கப்படும்” என தெரிவித்தார்.

Next Post

“இந்தியாவுக்காக அந்த 2 கோப்பை ஜெயிக்காம ஓய்வு எடுக்க மாட்டேன்!!" – ரோகித் சர்மா 

Fri Apr 12 , 2024
50 ஓவர் உலகக் கோப்பையை வென்று கொடுக்க வேண்டும், அதுவரை ஓய்வு பெறுவது குறித்து நான் யோசிக்கவில்லை என ரோகித் சர்மா தெரிவித்தார். டி20 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மாவை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கிய மும்பை அணி ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்துள்ளது. இப்போது மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒரு பிளேயராக விளையாடிக் கொண்டிருக்கிறார். இதுவரை மும்பை அணி ஆடிய அனைத்து போட்டிகளிலும் அதிரடி தொடக்கத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறார். […]

You May Like