fbpx

DRUG முன்னேற்ற கழகமாக மாறிவிட்டது திமுக!… ஓட ஓட விரட்டவேண்டும்!… நிர்மலா சீதாராமன் விளாசல்!

DMK என்று அழைக்கப்படும் திமுக, DRUG முன்னேற்றக் கழகமாக மாறிவிட்டதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன விமர்சித்துள்ளார்.

தஞ்சாவூரில் பாஜக வேட்பாளர் கருப்பு எம். முருகானந்தத்தை ஆதரித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாகன பேரணி மூலம் பரப்புரை செய்தார். அப்போது பேசிய அவர், தஞ்சாவூர் பல எழுத்தாளர்களையும், இசைக் கலைஞர்களையும் உருவாக்கிய மண். இங்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு கஜா புயல் வீசி விவசாயிகளும், பொதுமக்களும் பாதிக்கப்பட்டபோது, நானும், இங்கு போட்டியிடும் கருப்பு முருகானந்தமும் பல உதவிகளை செய்து அவர்களது வாழ்வாதாரத்தை மீட்டுள்ளோம்.

கச்சத்தீவு விவகாரத்தை ஏன் இப்போது பேச வேண்டும் என்கிறார்கள். கச்சத்தீவை திமுக தாரைவார்த்து கொடுத்ததால்தான், இன்று வரை மீனவர்கள் பிரச்சினை தீராமல் உள்ளது என்ற உண்மையை அனைவரும் பேச வேண்டும். ‘டிஎம்கே’ என்றழைக்கப்படும் திமுக, ‘டிரக்’ முன்னேற்ற கழகமாக மாறியுள்ளது. போதைப் பொருட்கள் மூலம் திமுகவுக்கு வந்த செருக்கை, ஓட்டு மூலமாக நொறுக்க வேண்டும். திமுகவை நாம் ஓட ஓட விரட்ட தேர்தலில் மக்கள் கருப்பு எம்.முருகானந்தத்தை ஆதரிக்க வேண்டும்” என்று பேசியது குறிப்பிடத்தக்கது.

Readmore: பழமையான இந்து கோவிலை இடித்த பாகிஸ்தான்!… வணிக வளாகம் அமைக்க திட்டம்!

Kokila

Next Post

பிரம்மன் உலகத்தைப் படைத்த முதல்நாள் இன்று!… தமிழ் புத்தாண்டின் வரலாறு, முக்கியத்துவம்!

Sun Apr 14 , 2024
Tamil New Year: இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் தமிழ் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். தமிழ் நாள்காட்டியில் சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது. இது வழக்கமாக ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி வருகிறது. கேரளம், மணிப்பூர், அசாம் போன்ற மாநிலங்களிலும், நேபாளம், பர்மா, இலங்கை போன்ற அண்டை நாடுகளிலும் சித்திரை மாதத்தில்தான் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. ஒரு தமிழ் ஆண்டு என்பது வானியல் ரீதியாகவும் அறிவியல் […]

You May Like