fbpx

ஜாக்பாட் அறிவிப்பு..!! டிசிஎஸ் நிறுவன ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு..!! எவ்வளவு தெரியுமா..?

ஊழியர்களுக்கு இந்தாண்டு இரட்டை இலக்க ஊதிய உயர்வை அறிவித்துள்ளது டிசிஎஸ் நிறுவனம். நாட்டின் பிற ஐடி நிறுவனங்களைப் போல் அல்லாமல் ஒவ்வொரு ஆண்டும் அதன் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை அளித்து வருகிறது டிசிஎஸ் நிறுவனம். கொரோனா காலகட்டத்திலும் டிசிஎஸ் நிறுவன ஊழியர்களுக்கு, ஊதிய உயர்வு அளிக்கப்பட்டது. அந்த வகையில், இந்தாண்டு ஊதிய உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணியில் சிறந்து விளங்கும் ஊழியர்களுக்கு இரண்டு இலக்கு ஊதிய உயர்வையும், பிற ஊழியர்களுக்கான வழக்கமான ஊதிய உயர்வையும் இம்மாதம் மாதம் முதல் வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இது அந்நிறுவன ஊழியர்களிடம் மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது. டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை மனிதவள அதிகாரி மிலிந்த் லக்கட் இதுகுறித்து “ஒவ்வொரு ஆண்டும் நாங்கள் செய்து வருவதுபோல், இந்த ஆண்டும் எங்கள் ஊழியர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். டாப் பர்பாமென்ஸ் ஊழியர்கள் இரண்டு இலக்கு சம்பள உயர்வைப் பெறுவார்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

அவர்களை தவிர்த்துப் பிற ஊழியர்களுக்குச் சம்பள உயர்வு அவர்களின் செயல்பாட்டின் அடிப்படையில் 4.5% முதல் 7% வரை இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இந்தாண்டு சுமார் 40,000 பேரை புதிதாக பணியில் அமர்த்த நிறுவனம் இலக்கு வைத்துள்ளது. இதில் பெரும்பாலானோர் முந்தைய நிதியாண்டின் சுழற்சிகளில் இருந்து ஏற்கனவே பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Read More : உள்ளாடைகளை வேலியில் தொங்கவிடும் பெண்கள்..!! இதுக்கு பின்னாடி இப்படி ஒரு காரணம் இருக்கா..?

Chella

Next Post

'Boat' நிறுவன யூசரா நீங்கள்..? உங்கள் ரகசிய தகவல்கள் லீக்..!! அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்..!!

Mon Apr 15 , 2024
இந்தியாவில் மொபைல் தயாரிப்புகளில் பல நிறுவனங்கள் போட்டா போட்டியில் உள்ளன. இதில், போட் நிறுவனம் குறிப்பிடத்தக்க வாடிக்கையாளர்களின் கவனத்தை பெற்றுள்ளது. போட் நிறுவனத் தயாரிப்புகளை பயன்படுத்தியவர்களின் ரகசிய தகவல்கள் கசிந்துள்ளது. ஹெட்ஃபோன்கள், ஸ்பீக்கர்கள், ட்ரூ வயர்லெஸ் பட்ஸ் டிராவல் சார்ஜர்கள் மற்றும் பல நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு பெயர் பெற்ற பிரபலமான இந்தியாவின் மின்னணு நிறுவனம். ஒரு அறிக்கையில், 7.55 மில்லியன் வாடிக்கையாளர்களின் தகவல்களில் கசிந்துள்ளது. இந்த வகையான தனிப்பட்ட […]

You May Like