fbpx

நடிகை ஜான்வி கபூர் காதலனின் சொத்து மதிப்பு இத்தனை கோடிகளா?

தமிழ் திரையுலகில் மட்டுமன்றி ஒட்டுமொத்த இந்திய திரையுலகிற்குமே மறக்க முடியாத நாயகியாக இருப்பவர் ஸ்ரீதேவி. இவருக்கு ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் என இரண்டு மகள்கள் இருக்கின்றனர். 2018ஆம் ஆண்டு தடக் எனும் படம் மூலம் திரையுலகிற்குள் அறிமுகமானார் ஜான்வி கபூர்.

தொடர்ந்து கோஸ்ட் ஸ்டோரீஸ், குஞ்சன் சக்சேனா:தி கார்கில் கேர்ள், ரூஹி, மில்லி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இப்படங்களில் பல, ஹிட் அடித்துள்ளன. இவர், தற்போது தெலுங்கில் எண்ட்ரி கொடுக்க இருக்கிறார். கொரட்டாலா சிவா இயக்கி வரும் ‘தேவாரா: பாகம் 1’ படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் ஜான்வி கபூர்

இந்தியில் ஜான்வி கபூர் பல படங்களில் நடித்து வந்தாலும் அவருக்கு பெரிய நடிகர்களின் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஜான்வி கபூர் மகாராஷ்ட்ராவின் முன்னாள் முதல்வர் சுசில்குமார் ஷிண்டேவின் பேரனும் பிரபல தொழிலதிபரான சஞ்சய் பஹாரியாவின் மகனுமான ஷிகர் பஹாரியாவை காதலிக்கிறார்கள்.

இந்நிலையில், ஷிகர் பஹாரியாவின் சொத்து மதிப்பு விவரம் வைரலாகிறது. தாத்தா, அப்பா சொத்து மதிப்பெல்லாம் பல கோடி இருக்கும் நிலையில், தனியாக சம்பாதித்து ஷிகர் பஹாரியாவே சுமார் 84 கோடி ரூபாய் சொத்துக்கு அதிபதியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

Next Post

அலைமோதும் கூட்டம்..!! ஏப்ரல் 23ஆம் தேதி இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை..!! ஆட்சியர் அறிவிப்பு..!!

Mon Apr 15 , 2024
கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வை முன்னிட்டு ஏப்ரல் 23 ஆம் தேதி மதுரை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 21 ஆம் தேதி கள்ளழகர் அழகர் மலையில் இருந்து மதுரையை நோக்கி புறப்படுகிறார். ஏப்ரல் 22 ஆம் தேதி காலை மூன்று மாவடியில் கள்ளழகருக்கு எதிர்சேவை நிகழ்வு நடைபெறுகிறது. ஏப்ரல் 23 ஆம் தேதி அதிகாலை 5.51 மணியில் இருந்து 6.10 மணிக்குள் சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்வான […]

You May Like