Lok Sabha: பாராளுமன்றத் தேர்தலுக்கு இரண்டு நாட்கள் உள்ள நிலையில் பாஜக மகளிர் அணி செயலாளர் அமைச்சர் கீதா ஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைந்தது பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.
2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தலின்(Lok Sabha) முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ளது. நாளையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைய உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் திமுக கூட்டணி அதிமுக கூட்டணி மற்றும் பாஜக கூட்டணி கட்சிகள் தேர்தலை எதிர்கொள்கிறது. வாக்குப்பதிவு நாள் நெருங்கி வரும் வேளையில் பாஜகவைச் சார்ந்த 85 பேர் அந்தக் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்து இருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.
பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி செயலாளர் பானுப்பிரியா மற்றும் விவசாய அணி மண்டல தலைவர் சரவணகுமார் உட்பட 85 பாஜக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அமைச்சர் கீதா ஜீவன் முன்னிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர் .
தூத்துக்குடி தொகுதியில் திமுக மற்றும் இந்திய கூட்டணி சார்பாக கனிமொழி கருணாநிதி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜக கூட்டணி சார்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த விஜய் சீலன் என்பவர் போட்டியிடுகிறார். அதிமுக கட்சியின் சார்பில் சிவசாமி வேலுமணி மற்றும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக ரோவீனா ரூத் ஜேன் ஆகியோர் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.