fbpx

தாத்தா-வுக்கு வாக்களிக்க லண்டனில் இருந்து வந்த பேரன்!

தனது தாத்தா டி ஆர் பாலுவிற்கு வாக்களிப்பதற்காக லண்டனில் படித்துக் கொண்டிருக்கும் அவரது பேரன் சூர்யா ஸ்ரீபெரும்புதூர் வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்தினார்.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும்,  புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.  பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  சரியாக காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.  அதே போன்று அரசியல் கட்சி தலைவர்கள்,  வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர். இந்த நிலையில்,  திமுக ஸ்ரீபெரும்புதூர் தொகுதி வேட்பாளர் டி ஆர் பாலுவின் பேரனும் அமைச்சர் டிஆர்பி ராஜாவின் மகனுமான சூர்யா லண்டனில் படித்து வருகிறார்.

 ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும் தனது தாத்தா டி ஆர் பாலுவி ற்கு வாக்களிப்பதற்காக லண்டனில் படித்துக் கொண்டிருக்கும் சூர்யா சென்னை வந்தார். இந்த நிலையில் இன்று சென்னை பீர்க்கங்கரணையில் உள்ள வாக்குச்சாவடிக்கு சூர்யா தனது தாத்தா டி.ஆர்.பாலு மற்றும் குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார்.

Next Post

பரபரப்பு..! மணிப்பூர் வாக்குச்சாவடியில் துப்பாக்கிச் சூடு! மீண்டும் கலவரமா?

Fri Apr 19 , 2024
மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு முதல்கட்டமாக 21 மாநிலங்களில் நடந்து வரும் சூழலில், மணிப்பூர் வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் இன்று கோலாகலமாக துவங்கி இருக்கிறது. 7 கட்டங்களாக நடைப்பெறும் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்களில் நடந்து வருகிறது. சுமார் 102 தொகுதிகளில் இந்த மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. பல மாநிலங்களில் விறு விறுப்பாக தேர்தல் நடந்து […]

You May Like