fbpx

மக்களவைத் தேர்தல் 5PM நிலவரம்: தமிழகத்தில் 63.20% வாக்குப்பதிவு ..! தருமபுரி நாடாளுமன்றத் தொகுதி டாப்..!

தமிழகத்தில் மாலை 5மணி நிலவரப்படி 63.20% வாக்குப்பதிவு.

18வது மக்களவைக்கான பொதுத் தேர்தல் 2024, இன்று தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை, மொத்தம் 68,321 வாக்கு சாவடி மையங்கள் உள்ளன. வாக்காளர் எண்ணிக்கை 6.23 கோடி. அதில் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3.06 கோடி. பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3.17 கோடி. மற்ற வாக்காளர்களின் எண்ணிக்கை 8,467. மேலும் முதல் முறை வாக்காளர்கள் 10.92 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். இந்த தேர்தலுக்கு 3.32 லட்சம் பணியாளர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில் மக்கள் வரிசையில் நின்று ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். இந்நிலையில் மாலை 5 மணி நிலவரப்படி தமிழகத்தில் 63.20 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக தர்மபுரியில், 67.52 சதவிகிதமும், அதற்கு அடுத்தபடியாக 67.37 சதவிகிதமும் பதிவாகியுள்ளது. கடைசி மூன்று இடங்களை சென்னையின் மூன்று தொகுதிகள் பிடித்துள்ளது.

  1. தர்மபுரி 67.52
  2. நாமக்கல் 67.37
  3. ஆரணி 67.34
  4. கள்ளக்குறிச்சி 67.23
  5. கரூர் 66.91
  6. சிதம்பரம் 66.64
  7. பெரம்பலூர் 66.56
  8. திருவண்ணாமலை 65.91
  9. சேலம் 65.86
  10. அரக்கோணம் 65.61
  11. வேலூர் 65.12
  12. விழுப்புரம் 64.83
  13. கிருஷ்ணகிரி 64.65
  14. ஈரோடு 64.50
  15. திண்டுக்கல் 64.34
  16. நாகப்பட்டினம் 64.21
  17. கடலூர் 64.10
  18. நீலகிரி 63.88
  19. விருதுநகர் 63.85
  20. மயிலாடுதுறை 63.77
  21. பொள்ளாச்சி 63.53
  22. தேனி 63.41
  23. தென்காசி 63.10
  24. தூத்துக்குடி 63.03
  25. ராமநாதபுரம் 63.02
  26. தஞ்சாவூர் 63.00
  27. கன்னியாகுமரி 62.82
  28. சிவகங்கா 62.50
  29. திருச்சிராப்பள்ளி 62.30
  30. காஞ்சிபுரம் 61.74
  31. திருவள்ளூர் 61.59
  32. கோவை 61.45
  33. திருப்பூர் 61.43
  34. திருநெல்வேல் 61.29
  35. மதுரை 60.00
  36. ஸ்ரீபெரும்புதூர் 59.82
  37. வடசென்னை 59.16
  38. மத்திய சென்னை 57.25
  39. தேன்சேன்னை 57.04

Kathir

Next Post

கோவையில் 830 வாக்காளர்களின் பெயர்கள் காணவில்லை...! பாஜகவினர் திடீர் போராட்டம்...!

Fri Apr 19 , 2024
கோவை லோக்சபா தொகுதிக்குட்பட்ட கவுண்டம்பாளையம் பகுதியில், வாக்காளர் பட்டியலில், 830 வாக்காளர்களின் பெயர்கள் காணாமல் போனதாக, பா.ஜ.க, நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கப்பா பள்ளியில் உள்ள சாவடி எண் 214-ல் வாக்குரிமையைப் பயன்படுத்த வந்த ஏராளமான வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாததால் ஏமாற்றம் அடைந்தனர். உள்ளாட்சித் தேர்தலில் மொத்தமுள்ள 1,353 வாக்காளர்களில் 523 வாக்காளர்களின் பெயர்கள் மட்டுமே இந்த நாடாளுமன்றத் தேர்தலில் இடம் பெற்றுள்ளன. வாக்காளர்கள் காணாமல் […]

You May Like