நாளை தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
17-வது மக்களவையின் பதவிக்காலம் 2024-ம் ஆண்டு ஜூன் 16-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய மக்களவையை அமைப்பதற்கு தேர்தல்கள் நடத்தப்பட உள்ளன. அரசியலமைப்பு சட்ட விதிகளைக் கருத்தில் கொண்டு, 18-வது மக்களவைக்கான தேர்தல்களை சுதந்திரமான முறையில் நடத்த விரிவான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் செய்துள்ளது
நாடு முழுவதும் முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடந்து முடிந்தது. 2வது கட்டம் ஏப்ரல் 26ம் தேதியும், 3வது கட்டம் மே 7ம் தேதியும், நான்காவது கட்டம் மே 13ம் தேதியும், ஐந்தாவது கட்டம் மே 20ம் தேதியும், 6வது கட்டம் மே 25ம் தேதியும், ஏழாவது கட்டம் ஜூன் மாதம் என ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறும். தேர்தல் நடைபெறும் நாளில் அனைத்து வங்கிகளும் விடுமுறை தினமாக அறிவிக்கப்படுவதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
2-ம் கட்டமாக வரும் 26-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 89 தொகுதிகளில் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இரண்டாம் கட்டத்தில் கேரளாவில் உள்ள 20 தொகுதிகள், கர்நாடகத்தின் 14 தொகுதிகள், ராஜஸ்தானின் 13 தொகுதிகள், உத்தரப்பிரதேசத்தின் 8 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால் அந்த மாநிலங்களில் அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்து அரசு உத்தரவிட்டுள்ளது.