fbpx

Today Gold Rate: சரசரவென குறைந்த விலை…! தங்கம் வாங்க இதுவே சரியான நேரம்…!

சென்னையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.53,920க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Today Gold Rate: சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, தங்கம் விலை கடந்த சில மாதங்களாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வந்தது. ஆனால் கடந்த மார்ச் மாதம் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டு வந்த நிலையில் திடிரென ஏப்ரல் 23ஆம் தேதி சவரனுக்கு 1,160 ரூபாய் குறைந்தது. அதன் பிறகு ஏற்ற இறக்கத்துடனே காணப்படுகிறது.

நேற்றைய தினம் (ஏப்ரல் 28) தங்கம் ஒரு கிராம் ரூ.6,770 க்கும், சவரன் ரூ.54,160 விற்பனையா நிலையில், இன்றைய தினம் (ஏப்ரல் 29) சவரனுக்கு ரூ.240குறைந்து ரூ.53,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.30 குறைந்து ரூ.6,740-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல் வெள்ளியின் விலை மாற்றமின்றி காணப்படுகிறது. அதன்படி ஒரு கிராம் வெள்ளி 87.50 ரூபாய்க்கும், 1கிலோ வெள்ளியின் விலை ரூ.87,500-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Kathir

Next Post

"செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவை விசாரிக்க கூடாது" உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை பதில் மனு..!

Mon Apr 29 , 2024
செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது. சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார், செந்தி பாலாஜிக்கு எதிரான வழக்கில் மூன்று மாத காலத்தில் விசரித்து முடிக்க சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டதற்கு எதிராகவும், தனக்கு ஜாமீன் வழங்க கோரியும், செந்தில் பாலாஜி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் […]

You May Like