fbpx

கொளுத்தும் வெயில்..!! இதற்கு காரணம் என்ன தெரியுமா..?

கடந்த காலங்களைக் காட்டிலும் இந்தாண்டு ஏப்ரல் மாதம் வெப்பம் மிக மோசமாக இருக்கும் நிலையில், அதற்கான காரணத்தை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

குஜராத் முதல் மேற்கு வங்கம் இடையேயான பகுதிகளில் தான் இந்த வெப்ப அலை ஏற்படும். இதை கோர் ஹீட்வேவ் மண்டலம் என்று அழைப்பார்கள். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் முதல் ஜூன் வரை கோடைக் காலத்திலும், அரிதாக ஜூலை மாதத்திலும் வெப்ப அலை ஏற்படும். ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி, மத்தியப்பிரதேசம், உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர், ஒடிசா மாநிலங்களில் இவை பொதுவாக ஏற்படும்.

மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்கத்தின் சில பகுதிகளும் வெப்ப அலை ஏற்படும். இவை தவிர தென் இந்தியா எனப் பார்க்கும் போது ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் வெப்ப அலைக்கு வாய்ப்புகள் அதிகம். ஆனால், இம்முறை தமிழ்நாட்டிற்குக் கூட வானிலை மையம் பல சமயம் வெப்ப அலை எச்சரிக்கையை விடுத்துள்ளது. தமிழ்நாடு இந்த லிஸ்டில் வர என்ன காரணம் என்பது குறித்து தற்போது பார்ப்போம். முதல் காரணம் எல் நினோ நிகழ்வு. இந்த 2024இல் தான் எல் நினோ தொடங்கியுள்ளது. பசிபிக் பெருங்கடலில் மேற்பரப்பு நீர் வெப்பமாகும் வானிலை நிகழ்வு தான் எல் நினோ என்று அழைக்கப்படுகிறது.

இதனால் உலகின் பல பகுதிகளில் வெப்பம் அதிகரிக்கும். கடந்த ஜூன் 2023இல் இந்த எல் நினோ உருவானது. பொதுவாகவே எல் நினோ தொடங்கும் ஆண்டுகளில் வெப்பம் அதிகமாக இருக்கும். வெப்ப அலைகளும் தொடர்ச்சியாக ஏற்படும். கடந்த காலங்களிலும் இதுபோலவே நடந்துள்ளது. அடுத்து தெற்கு தீபகற்பம் மற்றும் தென்கிழக்கு கடலோரப் பகுதிகளில் தொடர்ந்து ஆண்டிசைக்ளோன் ஏற்படுவதும் ஏப்ரல் மாதம் வெப்பம் அதிகரிக்க ஒரு காரணமாக இருக்கிறது. மேலும், கடலில் இருக்கும் காற்று பூமியை நோக்கி வரும் போது. அவை வெப்பத்தைக் குறைக்கும். ஆனால், இந்த ஆண்டிசைக்ளோன் அமைப்புகள் காற்றைக் கீழ் நோக்கித் தள்ளுவதால் நிலத்திற்கு மேல் இருக்கும் காற்று கடலை நோக்கிச் செல்கிறது. இது கடலில் இருக்கும் குளிர்ந்த கடல் காற்று நிலத்தை நோக்கி வருவதைத் தடுக்கிறது.

எல் நினோ மற்றும் ஆண்டிசைக்ளோன் அமைப்புகள் சேர்ந்து தான் ஏப்ரல் மாதத்தில் வெப்பம் இந்தளவுக்கு அதிகரிக்க காரணமாக இருக்கிறது. இதன் காரணமாகவே மேற்கு வங்கம், ஒடிசா, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் மட்டுமின்றி தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநிலங்களிலும் வெப்ப அலை ஏற்படுகிறது. இந்த வெப்ப அலைகளால் ஒடிசா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட தென்கிழக்கு கடற்கரைப் பகுதிகள் மற்றும் கர்நாடகா, கேரளா, சிக்கிம், பீகார், ஜார்கண்ட் மற்றும் கங்கை மேற்கு வங்கம் தான் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பொதுவாக கேரளா, சிக்கம் போன்ற பகுதிகளில் வெப்பம் அதிகளவில் இருக்காது. ஆனால், இந்தாண்டு அங்குக் கூட வெப்ப அலை ஏற்பட்டுள்ளது என்றால் நிலைமை எந்தளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

Read More : வெளிமாநில அழகிகளை அடைத்து வைத்து படுஜோராக நடந்த விபச்சாரம்..!! வசமாக சிக்கிய ரவுடி..!!

Chella

Next Post

சத்தீஸ்கரில் 7 நக்சலைட்கள் சுட்டுக்கொலை..! பாதுகாப்பு படையினர் அதிரடி!

Tue Apr 30 , 2024
சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படை நடத்திய துப்பாக்கி சூட்டில் 7 நக்சலைட்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் குறைந்தது 7 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். காங்கேர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடனான கடுமையான துப்பாக்கிச் சண்டையைத் தொடர்ந்து இரண்டு பெண் கேடர்கள் உட்பட ஏழு மாவோயிஸ்டுகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. கொந்தளிப்பான நாராயண்பூர்-காங்கர் எல்லையில் அமைந்துள்ள அபுஜ்மத் காடுகளில் இந்த மோதல் வெளிப்பட்டது, இன்று காலை […]

You May Like