fbpx

உஷார்… நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த நம்பர் பிளேட் கட்டுப்பாடு…!

இன்று நள்ளிரவு முதல் சென்னையில் அமலுக்கு வந்த நம்பர் பிளேட் கட்டுப்பாடு.

இதுகுறித்து சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; சென்னை பெருநகரில் இயங்கும் தனியார் வாகனங்களில் பத்திரிகை, தலைமைச் செயலகம், டிஎன்இபி, ஜிசிசி, காவல்துறை, முப்படை போன்ற வாசகங்கள் ஒட்டப்பட்டுள்ளது. எனவே இதுபோன்ற ஸ்டிக்கர்கள் வாகன எண் தகட்டிலும், வேறு பகுதியிலும் ஒட்டக்கூடாது. இத்தகைய அரசாங்கத் தொடர்புடைய சின்னங்கள், எழுத்துக்களை தனியார் வாகனங்களில் வெளிப்படுத்துவது அதன் இயக்கம் மற்றும் பாதுகாப்பை சமரசம் செய்கிறது.

மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வாகனத்தில் இத்தகைய ஸ்டிக்கர்களை தவறாக பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் காவல்துறையின் கடுமையான நடவடிக்கைகளில் இருந்து தப்பித்து வருகிறார்கள். இது தவிர, பல தனியார் வாகனங்களில் ஒரு சில அரசியல் கட்சியைசித்தரிக்கும் சின்னங்கள், மருத்துவர் அல்லது வக்கீல் என வெளிப்படுத்துவதும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த உண்மையின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு. சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல்துறை இந்த நடைமுறைகளுக்கு எதிராக சாலையைப் பயன்படுத்துபவர்களை எச்சரித்தும், இந்த முரண்பாட்டினை தங்களது வாகனத்தில் சரிசெய்ய 01.05.2024 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. மேலும் இவ்விதி மீறலில் ஈடுபடுபவர்கள் மீது இன்று முதல் மோட்டார் வாகன சட்டம் 1988-ன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் மற்றும் (மோட்டார் வாகனத்தில் அங்கீகரிக்கப்படாத குறுயீடு) பிரிவு 198-ன் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்படும் மற்றும் வாகன எண் தகட்டில் ஏதேனும் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர்களை பயன்படுத்தினால் மோட்டார் வாகன விதி 50 u/s 177-ன் கீழ் அபராதம் விதிக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

"அக்னி சாட்சியாக" சடங்குகளுடன் நடைபெறும் திருமணமே அங்கீகரிக்கப்படும் - உச்சநீதிமன்றம் அதிரடி…!

Thu May 2 , 2024
The Supreme Court (SC) in a judgement clarified the legal requirements and sanctity of Hindu marriages under the Hindu Marriage Act 1955.

You May Like