fbpx

கவனம்!… மருந்து அட்டையில் சிவப்புக்கோடு!… சாப்பிடாதீர்கள்!… சுகாதாரத்துறை எச்சரிக்கை!

Red Line:மருந்து அட்டையில் சிவப்புக் கோடு இருந்தால் அவற்றை மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே உட்கொள்ள வேண்டும் என்றும் நீங்களே அம்மருந்துகளை ஒருபோதும் எடுத்துக்கொள்ளக்கூடாது என்றும் மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இன்றைய காலத்தில் மருந்து மாத்திரை இல்லாமல் ஒரு நாளைக் கூட கடத்த முடியாத நிலைக்கு நம்மில் பெரும்பாலானோர் வந்துவிட்டோம். தலைவலி முதல் நாள்பட்ட நோய்கள் வரை, அனைத்திற்கும் மருந்து மாத்திரைகளே நிவாரணம் அளிக்கின்றன. வழக்கமாக மருத்துவர் எழுதிக் கொடுக்கும் மருந்து சீட்டுகளை மருந்தகத்தில் கொடுத்து நமக்கு தேவையான மாத்திரைகளை வாங்கிக் கொள்கிறோம். இல்லாவிட்டால் நேரடியாக மருந்தகத்திற்கே சென்று மருந்தின் பெயர்களை கூறி வாங்கிக் கொள்கிறோம்.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவுரையில், பொதுவாக, ஆண்டிபயாடிக் மாத்திரைகளில்தான், இதுபோல் சிவப்புக்கோடுகள் இருக்கும். மருத்துவர் பரிந்துரைத்த அளவு மற்றும் மாத்திரைகளை உட்கொள்ளுங்கள், உங்களுக்கு தேவைப்பட்ட போதெல்லாம், நீங்களாகவே இந்த மாத்திரைகளை வாங்கி உட்கொள்ளாதீர்கள் என தெரிவித்துள்ளது.

Readmore: உங்கள் குழந்தைகளை ஏன் தனியாக தூங்க வைக்க வேண்டும் தெரியுமா..? பெற்றோர்களே இந்த வயசு வரை தான் எல்லாம்..!!

Kokila

Next Post

காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்கவில்லை என்றால் மின்சாரம் துண்டிக்கப்படும்...! எம்.எல்.ஏ. மிரட்டல்...!

Fri May 3 , 2024
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்கவில்லை என்றால் மின்சாரம் துண்டிக்கப்படும்’ என கர்நாடகாவில் எம்.எல்.ஏ. மிரட்டல் விடுத்துள்ளார். கர்நாடகாவில் உள்ள 28 நாடாளுமன்ற தொகுதிகளில், உடுப்பி, சிக்மகளூரு, ஹசன் உள்ளிட்ட 14 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 26-ம் தேதி தேர்தல் முடிந்தது. மீதமுள்ள 14 தொகுதிகளுக்கு வரும் 7ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து, காக்வாட் தொகுதியைச் சேர்ந்த அக்கட்சி எம்.எல்.ஏ., ராஜு காகே பிரசாரம் […]

You May Like