fbpx

‘உருவகேலி செய்யாதீர்கள்’ 2 ஆண்டுகளாக நோயுடன் போராடும் பிரபல நடிகை உருக்கம்..

மலையாளத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியான அங்கமாலி டைரீஸ் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் அன்னா ரேஷ்மா ராஜன். இந்த படத்தை தொடர்ந்து மோகன்லால் நடித்த வெளிப்பாடிண்டே புஸ்தகம் படத்தில் கதாநாயகியாக நடித்தார். அதைவிட அந்த படத்தில் இடம்பெற்ற ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு ஆடியதன் மூலம் மிகப்பெரிய அளவில் புகழ்பெற்றார். அதன் பிறகு அய்யப்பனும் கோஷியம் படத்தில் பிரித்விராஜின் மனைவியாக நடித்திருந்தார்.

தொடர்ந்து பிசியான நடிகையாக மாறுவார் என எதிர்பார்த்தால் பெரிய அளவில் அவரை படங்களை பார்க்க முடியவில்லை. இதற்கு காரணம் அவரது உடல் எடை அதிகரித்தது தான் என்று சொல்லப்பட்டு வந்தது. இந்த நிலையில் சமீபத்தில் அவர் தனது நடன வீடியோ ஒன்றை சோசியல் மீடியாவில் வெளியிட்டிருந்தார். பலரும் அவரது நடன அசைவுகளை பார்த்து கிண்டலாக விமர்சனங்களை வெளிப்படுத்தி வந்தனர். பலர் உருவ கேலியும் செய்திருந்தனர்.

இது குறித்து பேசிய அவர், என்னுடைய உடல்நலம் குறித்து அக்கறை கொண்ட அனைவருக்கும் நன்றி. உடை, வெப்பம் காரணமாக என நடன அசைவுகள் குறைவாக இருக்கின்றன. அதே சமயம் நான் தொழில்முறை நடனக் கலைஞர் கிடையாது. ஆனால் நடனம் பிடிக்கும். எனக்கு பிடித்ததை நான் முயற்சி செய்கிறேன். அதனால் நான் மகிழ்சியாக உணர்கிறேன். எந்த தடைகளும் இல்லாமல் நடனம் ஆட விரும்புகிறேன். எனது சூழ்நிலையை கருதி எனக்கு ஆதரவு தாருங்கள் என ஸ்டோரி பதிவிட்டிருந்தார்.

மேலும், 2 ஆண்டுகளாக நோயுடன் போராடுகிறேன். வீட்டில் எதுவுமே செய்யாமல் இருக்க முடியவில்லை. சில நேரங்களில் உடல் எடை தானாகவே கூடுகிறது.அதன் பின் தானாகவே உடல் மெலிந்து விடுகிறது. என்னை உடல் ரீதியாக என்னை யாரும் விமர்சிக்க வேண்டாம். நடனம் பிடித்து இருந்தால் பாருங்கள் இல்லை என்றால் கடுமையாக விமர்சிக்க வேண்டாம் என்று அன்னா ரேஷ்மா ராஜன் கூறியுள்ளார்.     

Next Post

விவாகரத்தா? சூர்யாவிடம் இது பிடிக்காததால்...! நடிகை ஜோதிகா ஓபன் டாக்..!

Fri May 3 , 2024
சூர்யா – ஜோதிகா இருவரிடையே விவாகரத்து குறித்து நடிகை ஜோதிகா பேட்டியளித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த ஜோதிகா நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு, சிறிது காலம் நடிப்பதற்கு ஓய்வளித்த அவர், தற்போது முதன்மை கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். சைத்தான் படம் மூலம் இந்திக்கும் சென்றுள்ளார். அண்மையில் சூர்யா – ஜோதிகா இடையே ஏற்பட்ட சில பிரச்சனைகளால் ஜோதிகா மும்பையிலும், சூர்யா […]

You May Like