fbpx

வருமான வரி கட்டாத 5 லட்சம் பேரின் சிம் கார்டுகள் முடக்கப்படும்..! எச்சரிக்கும் அரசு..!

வருமான வரி செலுத்தாத 5,06,671 பேரின் சிம் கார்டுகளை முடக்க பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது. வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கு எதிராக அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அந்த வகையில், சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமான பயனர்களின் சிம் கார்டுகளை முடக்க திட்டமிட்டுள்ளது பாகிஸ்தான் அரசு. மேலும், நாட்டு மக்களிடையே வருமான வரி தாக்கலை அதிகரிக்க செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதன்படி சுமார் 5,06,671 பயனர்களின் சிம் கார்டுகள் முடக்கப்பட உள்ளது. இது தொடர்பான விவரத்தை வருமான வரி பொது உத்தரவு மூலம் மத்திய வருவாய் வாரியம் வெளியிட்டுள்ளது. இதனை உடனடியாக செயல்படுத்தும் வகையில் பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணையம் மற்றும் சிம் கார்டுகளை வழங்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் வருமான வரி கணக்கு விவரங்களை மக்கள் தாக்கல் செய்யும் பட்சத்தில் சிம் கார்டுகள் தானாகவே செயல்பாட்டுக்கு திரும்பும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை தோறும் வருமான வரி கணக்கை தாக்கல் செய்த நிகழ் நேர பட்டியல் அப்டேட் செய்யப்படும் என்றும். அந்த பட்டியலில் இடம் பெறும் நபர்களின் விவரங்கள் பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணையம் மற்றும் டெலிகாம் நிறுவனங்களுக்கு தெரிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் சிம் கார்டுகள் மீண்டும் ஆக்டிவேட் செய்யப்படும் என விளக்கம் தரப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கடந்த மார்ச் 1-ம் தேதி வரையில் சுமார் 42 லட்சம் பேர், தங்களது வருமான வரி கணக்கை அந்த நாட்டில் தாக்கல் செய்துள்ளனர். இது கடந்த ஆண்டை காட்டிலும் அதிகம் என தெரிகிறது. இதே காலகட்டத்தில் கடந்த 2022-ல் வருமான வரி கணக்கை தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை 59 லட்சமாக இருந்துள்ளது.மக்கள் ஆண்டுதோறும் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்தும் வகையிலும், வரி தாக்கலை அதிகரிக்கவும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Rupa

Next Post

Tn govt: வறட்சியால் கருகும் தென்னை மரத்துக்கு ரூ.10,000வீதம் அரசு இழப்பீடு...

Sat May 4 , 2024
வறட்சியால் கருகும் கோடிக்கணக்கான தென்னை மரத்துக்கு ரூ.10,000வீதம் அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் தனது அறிக்கையில்; தமிழ்நாட்டில் அண்மைக்காலங்களில் இல்லாத அளவுக்கு வாட்டும் வெப்பநிலை மற்றும் வறட்சியால் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் மட்டும் 2.5 கோடி தென்னை மரங்கள் கருகி வருகின்றன. ஆயிரக்கணக்கில் செலவழித்தும் தென்னை மரங்களைக் காப்பாற்ற முடியாத நிலையில், உழவர்களின் துயரைத் துடைக்க […]

You May Like