fbpx

இந்து சமய அறநிலையத்துறையில் கொட்டிக் கிடக்கும் வேலை..!! மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் உதவி ஆணையர் மற்றும் தமிழ்நாடு பள்ளிக்கல்வி பணியில் மாவட்டக் கல்வி அலுவலர் ஆகிய பதவிகளுக்கான நேரடி நியமனத்திற்கு இணைய வழி மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1 பதவி: உதவி ஆணையர்

காலிப்பணியிடங்கள்: 21

வயதுவரம்பு: 34 வயத்திற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு பட்டம் மற்றும் சட்டப்பிரிவில் மூன்றாண்டு இளங்கலை அல்லது ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும் அல்லது குடிமை அல்லது குற்றவியல் வழக்குகளை நடத்தும் அதிகார வரம்பிற்குட்பட்ட நீதிமன்றங்களில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பயிற்சி வழக்கறிஞராக பயிற்சியில் இருக்க வேண்டும் அல்லது தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் செயல் அலுவலர் நிலை I, II, III,IV அல்லது ஆய்வாளர் அல்லது தலைமை எழுத்தர், கண்காணிப்பாளர் போன்ற பணிகளில் குறைந்தபட்சம் 6 ஆண்டுகளாவது பணிபுரிந்திருக்க வேண்டும்.

2 பதவி: மாவட்டக் கல்வி அலுவலர்

காலிப்பணியிடங்கள்: 8

வயதுவரம்பு: பொதுப் பிரிவினர் 32-க்குள்ளும், அங்கீகரிக்கப்பட்ட அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் பிரிவைச் சேர்ந்தவர்கள் 42 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு துறையில் முதுகலைப் பட்டம் மற்றும் இளங்கலை கற்பித்தல் அல்லது இளங்கலை கல்வியியல் (பி.எட்) முடித்திருக்க வேண்டும். உயர்நிலை, மேல்நிலைப் படிப்பகளில் தமிழை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும்.

தேர்வு முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. முதன்மைத் தேர்வு கட்டணம் ரூ.200. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 22.5.2024

முதல்நிலைத் தேர்வு நடைபெறும் நாள்: 12.7.2024

மேலும் விவரங்களுக்கு: https://www.tnpsc.gov.in/Document/tamil/05_2024_TAM_.pdf

Chella

Next Post

10, 12ஆம் தேதி பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது..? மே 20...!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

Sat May 4 , 2024
மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி முதல் மார்ச் மாதம் 15ஆம் தேதி வரை நடைபெற்றது. அதேபோல், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் பிப்ரவரி 15ஆம் தேதி முதல் ஏப்ரல் 2ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வினை, நாடு முழுவதும் 39 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதினர். இதனைத் தொடர்ந்து பொதுத்தேர்வு முடிவுகளை மாணவர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இதற்கிடையே, […]

You May Like