Election: 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் நாளை 4-ம் கட்ட தேர்தல்…!

நாளை நான்காம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

18-வது மக்களவைக்கு ஏழு கட்ட தோ்தல் அறிவிக்கப்பட்டு, இரு கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்துள்ளது. முதல்கட்டமாக, தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக கேரளம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 26-ம் தேதியும் தோ்தல் நடைபெற்றது. 3-ம் கட்ட தேர்தலுக்கான வாக்கு பதிவு 7-ம் தேதி நடைபெற்றது.

நாளை நான்காம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 1717 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 2024 மக்களவைத் தேர்தலுக்கான நான்காம் கட்ட தேர்தலுக்காக 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 96 தொகுதிகளுக்கு மொத்தம் 4264 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

நான்காம் கட்டத்தில், தெலங்கானாவில் அதிகபட்சமாக 17 மக்களவைத் தொகுதிகளில் இருந்து அதிகபட்சமாக 1488 வேட்பு மனுக்களும் அதைத் தொடர்ந்து ஆந்திராவில் 25 மக்களவைத் தொகுதிகளில் இருந்து 1103 வேட்பு மனுக்களும் மல்கஜ்கிரி மக்களவைத் தொகுதியில் அதிகபட்சமாக 177 வேட்பு மனுக்களும் நல்கொண்டா மற்றும் போங்கிர் தொகுதியில் தலா 114 வேட்பு மனுக்களும் பதிவாகியுள்ளன. நான்காம் கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சராசரி எண்ணிக்கை 1717 ஆகும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

கேரளாவை மிரட்டும் "West Nile" வைரஸ்: தமிழ்நாட்டிற்கு பாதிப்பா? சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!

Sun May 12 , 2024
கேரளாவில் வெஸ்ட் நைல் என்ற வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், யாரும் பீதியடைய வேண்டாம் என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. West Nile virus: தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளாவில் அண்மையில் தான் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வந்தது. இதன் காரணமாக தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்த நிலையில் தற்போது வெஸ்ட் நைல் வைரஸ் காய்ச்சல் அங்கு வேகமாக பரவி வருகிறது. இதனை […]

You May Like