fbpx

10-ம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களில் திருத்தம் இருந்தால் என்ன செய்ய வேண்டும்…?

10-ம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களில் திருத்தம் இருந்தால் என்ன செய்ய வேண்டும் என்கின்ற தகவலை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

பொதுத்தேர்வு எழுதிய பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது. பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்யும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை (Provisional Certificate) சரிபார்த்து. அவற்றில் மாணவர் பெயர், பிறந்த தேதி, தலைப்பெழுத்து, புகைப்படம். பயிற்று மொழி ஆகியவற்றில் ஏதேனும் பிழைகள் இருப்பின். தலைமையாசிரியரே அத்திருத்தத்தை மேற்கொண்டு தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். சான்றொப்பமிட்டு மாணவர்களுக்கு அளித்திட வேண்டும்.

தற்காலிக மதிப்பெண் சான்றிதழில் திருத்தங்கள் செய்து வழங்கப்பட்ட மாணவர்களுக்கு, பிழைகள் அற்ற மதிப்பெண் சான்றிதழ்கள் அச்சழுத்தம் செய்து வழங்க ஏதுவாக. அத்திருத்தங்களை பின்னர் பள்ளி கல்வித்துறையால் அறிவிக்கப்படும் நாளன்று ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும். தேர்வர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்கும் போது மாற்றுச் சான்றிதழில் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு மதிப்பெண் சான்றிதழ் வரிசை எண்ணை எழுதும் கலத்தில் “Refer Original Certificate” என்று குறிப்பிட்டு தேர்வர்களுக்கு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

பூமியை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்!… ரிக்டர் அளவில் 6.4ஆக பதிவு!... சுனாமி எச்சரிக்கையா?

Mon May 13 , 2024
Earthquake: மெக்சிகோவின் ஷைபஸ் மாகாணத்தில் நேற்று திடீரென ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மெக்சிகோவின் எல்லை நகரமான சுசியேட் அருகே நேற்று காலை 6 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் பசிபிக் கடற்கரையிலிருந்து 10 மைல் (16 கிலோமீட்டர்) மேற்கு-தென்மேற்கில் பிரிசாஸ் பார்ரா டி சுசியேட்டிற்கு அப்பால் மையம் கொண்டிருந்தது. அதேவேளை, இந்த நிலநடுக்கம் […]

You May Like