fbpx

பெரும் சோகம்!… நாகை எம்.பி. செல்வராஜ் காலமானார்!… அரசியல் தலைவர்கள் இரங்கல்!

RIP: நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

நாகை மக்களவைத் தொகுதி எம்.பி.யாக பொறுப்பு வகிப்பவர் எம்.செல்வராஜ்(67). இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினராகவும் உள்ள இவர், திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகேயுள்ள சித்தமல்லியில் வசித்து வருகிறார். ஏற்கெனவே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 2ம் தேதி மேல் சிகிச்சைக்காக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்தநிலையில், நேற்று இவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், நள்ளிரவு 1 மணியளவில் அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவரது மறைவிற்கு அரசியல் கட்சியினர் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முன்னதாக, 1989,1996,1998,2019 ஆகிய ஆண்டுகள் நடைபெற்ற மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி.,யாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Readmore: தமிழக பகுதிகளில் காற்றின் திசை மாறுபாடு!… இன்றுமுதல் 16ம் தேதிவரை சம்பவம் செய்யும் கனமழை!

Kokila

Next Post

தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு மழை..‌!

Mon May 13 , 2024
தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 16-ம் தேதி வரை ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ. முதல் 40 கி.மீ. வரை) லேசானது முதல் மிதமான […]

You May Like