தொடர்ந்து தங்கத்தின் விலை உயர்ந்து வருவதால் அதன் கையிருப்பை அதிகரிக்கும் நோக்கில் ஆர்பிஐ தங்கத்தை வாங்கி குவித்து வருகிறது.
கடந்த சில மாதங்களாக இந்திய ரிசர்வ் வங்கி தங்கத்தை வாங்கி குவித்துக் கொண்டிருப்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். உலக தங்க கவுன்சில் அறிக்கையில், ரிசர்வ் வங்கி வாங்கும் தங்கத்தின் மதிப்பு தொடர்ந்து பல ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. ஆனால் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஆர்பிஐ தங்கத்தை வாங்கியுள்ளது. மேலும் இந்த ஆண்டு தங்கத்தின் விலை உச்சம் அடைந்து வருவதால், பலரும் தங்களின் கையிலில் இருக்கும் தங்கத்தை விற்பனை செய்து அதன் மூலமாக லாபம் ஈட்டினார்.
2024ம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி ரிசர்வ் வங்கியின் மொத்த தங்கத்தின் கையிருப்பு 408.31 மெட்ரிக் டன்னாக உள்ளது. அதுவே 2022-23ம் நிதியாண்டின் இறுதியில் 301.10 மெட்ரிக் டன்னாக இருந்தது. பாங்க் ஆஃப் இங்கிலாந்து மற்றும் பேங்க் ஃபார் இன்டர்நேஷன்ல் செட்டில்மென்ட்ஸ் ஆகியவற்றில் 387.26 மெட்ரிக் டன் தங்கமும், தங்க டெபாசிட்டாக 26.53 மெட்ரிக் டன் தங்கமும் கையிருப்பாக உள்ளன.
2023ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில், இறக்குமதிகளை உள்ளடக்கிய அந்நியச் செலாவணி கையிருப்பு 9.3 மாதங்களில் இருந்து 11 மாதங்களாக அதிகரித்தது. 2022ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் 23 சதவீதமாக இருந்த குறுகிய காலக் கடனின் இருப்பு விகிதம், 2023ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் 20.3 சதவீதமாகக் குறைந்தது. கையிருப்புகளுக்கு ஏற்ற இறக்கம் காரணமாக 2022ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் 72.7 சதவிகிதத்திலிருந்து 2023ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் 70.4 சதவீதமாகக் குறைந்துள்ளது.
இந்தியாவில் மட்டுமல்ல பிற நாடுகளிலும் தங்கம் கையிருப்பாக அதிகம் வாங்கி குவிக்கப்படுகிறது. தங்கம் என்பது அனைத்து நாடுகளுக்குமான பொதுவான கரன்சி. மேலும், தற்போது நிலவி வரும் பொருளாதார மந்தநிலை, பங்குச் சந்தையின் அதிக ஏற்ற இறக்கங்கள் ஆகியவை தங்க கையிருப்பு அதிகரிப்புகளுக்கு காரணமாகக் கூறப்படுகிறது.
Read More : BREAKING | ’நேற்று தடை… இன்றே வாபஸ் வாங்கிய தமிழ்நாடு அரசு’..!! என்ன காரணம்..?