fbpx

‘நடந்தது இது தான்!’ வாக்கு மூலம் அளித்த சுவாதி மாலிவால்.. கெஜ்ரிவால் தனி செயலாளர் மீது வழக்கு பதிவு!

டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் வைத்து அவரது தனிச்செயலாளர் பிபவ் குமார் தாக்கியதாக ஆம் ஆத்மியின் மாநிலங்களவை பெண் எம்.பி ஸ்வாதி மாலிவால் கடந்த 13-ம் தேதி டெல்லி போலீசில் முறையிட்டார். இதுகுறித்து டெல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

குற்றம் சாட்டப்பட்ட பிபவ் குமார் மே 17-ம் தேதி தேசிய மகளிர் ஆணையத்தின் முன் நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டது. இதற்கிடையே, ஸ்வாதி மாலிவால் வீட்டுக்குச் சென்ற போலீசார் அவரிடம் 4 மணி நேரம் வாக்குமூலம் பெற்றனர்.

இந்நிலையில், ஸ்வாதி மாலிவாலிடம் வாக்குமூலம் வாங்கிய போலீசார் கூறுகையில், முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலைச் சந்திக்க காத்திருந்தபோது பிபவ் குமார் அறைக்குள் வந்து ஸ்வாதி மாலிவாலை திட்டினார். மேலும், பலமுறை அறைந்துள்ளார். அவரது முகம், மார்பு, வயிறு மற்றும் உடலின் கீழ் பகுதியில் தாக்கியுள்ளார். மாலிவால் தன்னை விடும்படி கெஞ்சியுள்ளார். பிறகு அங்கிருந்து வெளியே ஓடி வந்துள்ளார் என தெரிவித்தார்.

இந்நிலையில் சுவாதி மாலிவாலை டெல்லி போலீஸார், நேற்று இரவு 11 மணிக்கு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, இன்று அதிகாலை 3.15 மணிக்கு மருத்துவமனையிலிருந்து திரும்பினர். மருத்துவமனையில் அவருக்கு எக்ஸ்-ரே மற்றும் சி. டி ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது டெல்லி மகளிர் ஆணைய உறுப்பினர் வந்தனா சிங்கும் மாலிவாலுடன் இருந்தார்.

அதைத் தொடர்ந்து பிபவ்குமார் மீது டெல்லி போலீஸார் வழக்குப்பதிவு செய்து, அவரது வீட்டிற்கு சென்றனர். ஆனால் பிபவ்குமார் அங்கு இல்லை. இதையடுத்து அவரை தேடும் பணியை போலீஸார் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக டெல்லி போலீஸார் 10 குழுக்களை அமைத்துள்ளனர். அவற்றில் 4 குழு பிபவ்குமார் சல்லடை போட்டு தேடி வருகிறது.

வீட்டில் இருந்து கொண்டே மாதம் ரூ.20,500 சம்பாதிக்கலாம்..!! போஸ்ட் ஆபீஸின் சூப்பர் திட்டம் பற்றி தெரியுமா..?

Next Post

கோல்டன் விசா தெரியும், அதென்ன ப்ளூ விசா..? துபாய் அரசின் இந்த அறிவிப்பு பற்றி தெரியுமா?

Fri May 17 , 2024
நிலையான கலாச்சாரத்தை வளர்ப்பதற்கான குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக , ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அமைச்சரவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்த பங்களிப்பை வழங்கும்  நபர்களுக்கு 10 ஆண்டு நீல வதிவிட விசாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளது என்று துணைத் தலைவர் ஷேக் முகமது பின் ரஷித் அறிவித்தார். சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை வலியுறுத்தி, அந்நாட்டு பிரதமர் தனது எக்ஸ் தளத்தில், “நமது பொருளாதாரத்தின் நிலைத்தன்மை நமது சுற்றுச்சூழலின் நிலைத்தன்மையுடன் இணைக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த பகுதியில் நமது தேசிய திசைகள் தெளிவாகவும் நிலையானதாகவும் உள்ளன”  என பதிவிட்டுள்ளார். UAE […]

You May Like