fbpx

போகாதீங்க!… ரோஹித் சர்மாவை MI-ல் தங்க வைக்க முயற்சி!… நீத்தா அம்பானியின் உரையாடல் வைரல்!

Rohit Sharma: ரோஹித் ஷர்மாவை மும்பை இந்தியன்ஸ் அணியில் தங்க வைக்க நீத்தா அம்பானி முயற்சி செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மும்பை அணியை 5 முறை ஐபிஎல் கோப்பைக்கு அழைத்துச்சென்ற ரோகித் சர்மாவை ஓரங்கட்டிய மும்பை அணி, கேப்டன்சி பொறுப்பை தூக்கி ஹர்திக் பாண்டியாவிடம் ஒப்படைத்தது. ஹர்திக் – ரோகித் இடையேயான கருத்து மோதலையடுத்து, மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டு குழுக்களாக பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது. வீரர்களுக்குள் இருந்த இந்த பிளவால் நடப்பு ஐபிஎல் தொடரில் வெற்றிபெற முடியாமல் தடுமாறிய மும்பை அணி, முதல் அணியாக தொடரிலிருந்து வெளியேறியது.

இந்தநிலையில், மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று(வெள்ளிக்கிழமை) லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸுக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதில், அதிகபட்சமாக ரோஹித் ஷர்மா 38 பந்துகளில் 68 ரன்கள் எடுத்திருந்தார். இருப்பினும், வான்கடே மைதானத்தில் MI-க்காக ரோஹித் ஷர்மா விளையாடுவது இதுவே கடைசி நாளாக இருக்கலாம் என்று கருத்துக்கள் வெளியாகி வருகின்றனர். இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், எதிர்வரும் ஐபிஎல் ஏலத்தில் மும்பை அணியில் ரோகித் சர்மா விளையாட மாட்டார் என கூறப்படும் நிலையில், ரோஹித் ஷர்மாவை மும்பை இந்தியன்ஸ் அணியில் தங்க வைக்க நீத்தா அம்பானி முயற்சி செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. லக்னோ அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தின்போது, ரோகித் ஷர்மா – நீத்தா அம்பானி இருவரும் நீண்ட நேரம் உரையாடிக்கொண்டிருக்கும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. இருப்பினும், உறுதிப்படுத்த சரியான ஆடியோ எதுவும் இல்லை.

Readmore: நகைச்சுவை!… கட்டணங்களை உயர்த்திய திமுக அரசு, செலவுகளை மிச்சப்படுத்தியுள்ளதாக கூறுகிறது

Kokila

Next Post

அரசு கலைக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இடங்களை 50% அதிகரிக்க வேண்டும்...!

Sat May 18 , 2024
அரசு கலைக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இடங்களை குறைந்தது 50% அதிகரிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் தனது அறிக்கையில்; தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்காக நேற்று வரை 1.81 லட்சம் மாணவ, மாணவியர் விண்ணப்பித்துள்ளனர். இம்மாதம் 20-ஆம் தேதி வரை விண்ணப்பிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால் விண்ணப்பதாரர்களில் எண்ணிக்கை 3 .5 லட்சத்தைத் தாண்டும் […]

You May Like