fbpx

ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தாதீங்க..!! புற்றுநோய் வரும் அபாயம்..!! ICMR எச்சரிக்கை..!!

பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தினால், புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உணவுப் பொருட்களை பொறிக்க பயன்படுத்தும் எண்ணெய்யை பத்திரமாக எடுத்து வைத்து அதை மீண்டும் பயன்படுத்துவது, செலவை மிச்சப்படுத்த காலம் காலமாக பின்பற்றும் நடைமுறை. ஆனால் அந்த எண்ணெய்யை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது, புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரித்துள்ளது. மேலும் அதிக வெப்பநிலையில், எண்ணெயில் உள்ள சில கொழுப்புகள் டிரான்ஸ் கொழுப்புகளாக மாறுகின்றன என்றும் இவை நச்சு கலவைகளை உருவாக்கி இருதய நோய்கள் மற்றும் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

மேலும், எண்ணெய்யை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தும்போது அதில் உள்ள மூலக்கூறுகள் சிதைவடைந்து, ஆல்டிஹைடுகள் போன்ற தீங்கு விளைவிக்கும் நச்சுகளை வெளியிடும் என்றும் அவை அமிலமாக மாறக்கூடும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இவை செரிமான அமைப்பை சேதப்படுத்தி நாள்பட்ட நோய்களை உருவாக்கும் என்பது மருத்துவர்கள் கூறும் முக்கிய பின்விளைவாகும்.இதை தடுப்பதற்கான வழிகாட்டு நெறிமுகளையும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒருமுறை சூடாக்கிய எண்ணெய்யை மீண்டும் பொறித்தெடுக்கும் உணவுக்கு பயன்படுத்த கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யை, வடிகட்டி காய்கறிகள், இறைச்சி உள்ளிட்டவை வறுக்க, தாளிக்க பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதையும் ஓரிரு நாட்களில் சமைத்து விட வேண்டும் என்றும் சேமித்து வைத்து பயன்படுத்தக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எப்போதும் சமையலுக்கு புதிய, பதப்படுத்தப்படாத எண்ணெய்களை பயன்படுத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தி உள்ளது. பயன்படுத்திய எண்ணெயை எப்போதாவது மீண்டும் உபயோகிப்பது பெரிய பிரச்னை இல்லை என்றாலும், இந்த நடைமுறையை குறைத்து கொள்வது அவசியம் என்கிறார்கள் மருத்துவர்கள்.இவற்றையெல்லாம் தாண்டி மீண்டும் மீண்டும் சூடுபடுத்திய எண்ணெய்யில் சமைக்கும் உணவுகளின் சுவை மாறி ஒரு வித கசப்பை தருவதால். முடிந்தவரை நல்ல ஆரோக்கியம் மற்றும் சுவைக்காக புதிய எண்ணெயைப் பயன்படுத்துவது நல்லது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

Read More : ‘இனிமே நம்ம ஆட்டம் வேற மாதிரி இருக்கும்’..!! ’எனக்கு எந்த கட்டுப்பாடும் கிடையாது’..!! ’சிக்ஸ் அடிப்பது தான் வேலை’..!! அண்ணாமலை பரபரப்பு பேச்சு

English Summary

The Indian Council of Medical Research has warned that reusing used oil can increase the risk of cancer.

Chella

Next Post

மார்பகங்கள் தொங்கிய நிலையில் இருக்கா..? இயற்கையான சிகிச்சை மூலம் ஈசியா சரி பண்ணிடலாம்..!! இதை மட்டும் பண்ணுங்க போதும்..!!

Sun Apr 13 , 2025
Swimming in water for 10-15 minutes every day helps firm your breasts.

You May Like