fbpx

திடீர் வாபஸ்..!! இன்று 16 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை..!! வானிலை மையம் எச்சரிக்கை..!!

தமிழகத்தில் இன்று விடுக்கப்பட்ட மிக கனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ வாபஸ் பெறப்பட்டுள்ளது.

Rain | தமிழ்நாட்டில் கடந்த 10 நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தான் நேற்றைய தினம் தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் ரெட் அலர்ட் மற்றும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டது. அதன்படி, நேற்றும் பல மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்தது. அதேபோல் இன்றைய தினம் தேனி, தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்டவற்றில் இன்றும், நாளையும் அதி கனமழைக்கான ‘ரெட் அலர்ட்டை’ சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்திருந்தது.

ஆனால் காலநிலை மாற்றத்தால் அந்த 4 மாவட்டங்களில், ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இருப்பினும் கூட வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழையும், 13 மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாட்டில் தென்தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தேனி, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

அதேபோல் கன்னியாகுமரி, நெல்லை, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது. அதேபோல், நாளை தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மே 23ஆம் தேதி கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. இதுதவிர அடுத்த 5 நாட்களுக்கு குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, தமிழக கடலோர பகுதிகள், கேரள-கர்நாடக கடலோர பகுதிகள், தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறைக்காற்று வீச வாய்ப்பு உள்ளதால், மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Read More : வாகன ஓட்டிகளுக்கு நிம்மதியான செய்தி..!! சென்னை மாநகராட்சி எடுத்து மாஸ் முடிவு..!!

Chella

Next Post

JOB | மாதம் ரூ.60,000 சம்பளத்தில் BECIL நிறுவனத்தில் வேலை..!! டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்..!!

Tue May 21 , 2024
JOB | பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் (BECIL) நிறுவனத்தில் இருந்து காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அங்கு, Young Professional பணிகளுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே, தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம். பணியின் விவரங்கள்… நிறுவனம் – BECIL பணியின் பெயர் – Young Professional பணியிடங்கள் – 15 விண்ணப்பிக்க கடைசி தேதி – 29.05.2024 விண்ணப்பிக்கும் […]

You May Like