fbpx

எல்லை மீறும் பேச்சுக்கள்!! கோபமடைந்த தேர்தல் ஆணையம்!! பாஜக, காங்கிரஸ் நட்சத்திர பேச்சாளர்களுக்கு கடிவாளம்!!

பாஜக,காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பேச்சாளர்கள் தேர்தல் பிரசாரங்களில் எல்லை மீறி பேசுவது தேர்தல் ஆணையத்தை கோபமடைய செய்துள்ளது.

மக்களவைக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதுவரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. எஞ்சிய இரு கட்ட தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில், கடந்த 3 கட்ட தேர்தல் நிறைவடைந்த பின்னர் இரண்டு தேசிய கட்சிகளின் நட்சத்திர பேச்சாளர்களின் எல்லை மீறும் தேர்தல் பிரசாரம் தேர்தல் ஆணையத்தை கோபமடைய செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இது தொடர்பாக இரு தேசிய கட்சிகளான பா.ஜ.க. தேசிய தலைவர் நட்டா, காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோருக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதி அறிவுறுத்தியுள்ளது.

பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டாவிற்கு எழுதியுள்ள கடிதத்தில், தங்களின் நட்சத்திர பேச்சாளர்கள் ஜாதி, மத மற்றும் வகுப்புவாத அடிப்படையில் நாட்டை பிளவுபடுத்தக்கூடிய எந்த ஒரு பிரசாரமும் மேற்கொள்ளக்கூடாது. அதனை உடனே நிறுத்த வேண்டும். பிரசாரத்தின் போது எச்சரிக்கையுடன் இருக்குமாறு முறையான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இதனைக் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூஜ கார்கேவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், நமது ராணுவத்தில் அரசியலை கலக்கும் வகையில் அக்னிவீர் திட்டம் குறித்தும், இந்திய அரசியலமைப்பு சாசனம் ஒழிக்கப்படலாம் அல்லது விற்கப்படலாம் என தரம் தாழ்ந்து பேசுவதையும் நிறுத்த வேண்டும். இது போன்ற தவறான எண்ணங்களை உருவாக்கக்கூடிய பிரசாரத்தை காங்கிரஸ் நட்சத்திர பிரச்சாரகர்கள் வெளியிடக்கூடாது அரசியல் சாசனத்தை விமர்சிக்கக்கூடாது. இவ்வாறு அந்த கடித்தில் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

Read More: ’Goat’ திரைப்படத்தின் மாஸ் அப்டேட்..!! அமெரிக்கா to சென்னை..!! விஜய்யின் அடுத்த பிளான்..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

Rupa

Next Post

வாகனங்களில் ஸ்டிக்கர்!! மருத்துவர்கள் மீது நடவடிக்கை இல்லை!! நீதிமன்றம் போட்ட புதிய உத்தரவு

Thu May 23 , 2024
வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டியிருக்கும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொதுமக்களில் சிலா் அரசு வாகனம், காவல், வழக்கறிஞர், மனித உரிமைகள் ஆணையம், பத்திரிகை, ஊடகம் போன்று பல துறைகளைச் சாா்ந்த ஸ்டிக்கா்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதி ஒட்டி முறைகேடாகப் பயன்படுத்தி வருவதாக காவல் துறைக்கு புகாா்கள் தொடா்ந்து வந்தன. இதனை கருத்தில் கொண்டு விதிமுறைகளை மீறி வாகன பதிவு எண் பலகையில் […]

You May Like