fbpx

ஆனந்த் அம்பானி மட்டுமல்ல!… வயதில் மூத்த பெண்களை திருமணம் செய்துகொண்ட அம்பானி தலைமுறையினர்!

Anand Ambani-Radhika Merchant: ஆனந்த் அம்பானியை விட ராதிகா மெர்ச்சண்ட் வயதில் மூத்தவர் என்ற தகவல் தற்போது பேசுபொருளாகியுள்ளது.

இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் முதல் திருமணத்திற்கு முந்தைய நிகழ்வு குஜராத்தின் ஜாம்கரில் மார்ச் 1 முதல் 3 வரை உலகளவில் கவனத்தை ஈர்த்தது. இந்த நிகழ்வில் நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து பிரபலங்கள் கலந்து கொண்டு விழாவை மறக்க முடியாததாக மாற்றினர்.

உலகளாவிய பாப் பாடகி ரிஹானா முதல் இந்திய சூப்பர் ஸ்டார்கள் சல்மான் கான், ஷாருக் கான் மற்றும் அமீர் கான் வரை இங்கு வந்திருந்தனர். பில்கேட்ஸ் முதல் மார்க் ஜுக்கர்பெர்க் வரை தொழில்துறையைச் சேர்ந்தவர்களும் இதில் கலந்து கொண்டு இந்தியா வந்தனர். இந்த விழாவிற்கு சுமார் 1, 250 கோடி ரூபாய் அளவிற்கு செலவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து இவர்களது 2 வது திருமணத்திற்கு முந்தைய நிகழ்வு மே 28 முதல் 30ம் தேதி வரை தெற்கு பிரான்ஸ் கடற்கரையோரத்தில் ஒரு சொகுசு கப்பலில் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து, ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்சன்டுக்கும் வருகிற ஜூலை மாதம் திருமணம் நடைபெறவுள்ளது. அனந்த்-ராதிகாவின் திருமணத்திற்கு முந்தைய விழாவில் அம்பானி குடும்பம் மிகவும் பிஸியாக உள்ளது. இருவரின் திருமண பத்திரிகை வியாழக்கிழமை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இதன்படி, ஜூலை 12ஆம் தேதி ஆனந்த்-ராதிகா ஏழு சபதங்கள் எடுக்கவுள்ளனர். மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் சென்டரில் திருமண சடங்குகள் அனைத்தும் நிறைவடையும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆனந்த் அம்பானி ராதிகா மெர்சென்ட் திருமணம் பத்திரிகை வெளியிடப்பட்டுள்ளது. திருமணத்தின் முழு அட்டவணை மற்றும் ஆடை குறியீடு குறித்த தகவல்கள் அதில் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில், ஆனந்த் அம்பானியை விட ராதிகா மெர்ச்சண்ட் வயதில் மூத்தவர் என்ற தகவல் தற்போது பேசுபொருளாகியுள்ளது. ராதிகா டிசம்பர் 18, 1994 இல் பிறந்தார், ஆனந்த் ஏப்ரல் 10, 1995 இல் பிறந்தார். உண்மையில், ராதிகா தனது வருங்கால கணவர் அனந்தை விட 4 மாதங்கள் மூத்தவர்.

இதேபோல், கணவர்களை விட வயதான அம்பானி தலைமுறையினரின் தம்பதிகள் யார் என்று பார்க்கலாம். முகேஷ் அம்பானியின் தம்பி அனில் அம்பானியின் மனைவி டினா அம்பானி. இவர் கணவர் அனில் அம்பானியை விட சுமார் 2 வயது மூத்தவர். டினா ஒரு பாலிவுட் நடிகை மற்றும் டினா முனிம் என்ற பெயரில் பிரபலமாக அறியப்பட்டார். டினா மற்றும் அனில் திருமணமாகி மூன்று தசாப்தங்களுக்கு மேலாகிறது.

முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானி ஷ்லோகா மேத்தாவை மணந்தார். ஷ்லோகா மேத்தா ஆகாஷ் அம்பானியை விட ஒரு வயது மூத்தவர். ஆகாஷ் மற்றும் ஷ்லோகா சிறுவயது காதலர்கள் மற்றும் 2019 இல் திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Readmore: இன்னும் 3 நாட்களில் நிறுத்தப்படும் GPay சேவை..! பணம் அனுப்ப முடியாது..! Google Wallet-க்கு மாற்றப்படும் பயனர்கள்..!

Kokila

Next Post

UPSC முக்கிய அறிவிப்பு...! வரும் 5,6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் தேர்வு...!

Sat Jun 1 , 2024
இளநிலைப் பொறியாளர் 2024-க்கான தேர்வை பணியாளர் தேர்வாணையம் நடத்தவுள்ளது. இளநிலைப் பொறியாளர் (சிவில், மெக்கானிக்கல் & எலக்ட்ரிக்கல்) தேர்வு, 2024-க்கான தேர்வை பணியாளர் தேர்வாணையம் நடத்தவுள்ளது. கணினி அடிப்படையிலான இந்தத் தேர்வுக்கு தென்மண்டலத்தில் 81,301 விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்படுவார்கள். தேர்வுகள் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர் உட்பட 21 மையங்களில் உள்ள 28 இடங்களில் நடைபெறும். தென்மண்டலத்தில் 05.06.2024 முதல் 07.06.2024 வரை 3 நாட்களுக்கு நடைபெறும். […]

You May Like