Lok Sabha Election Results 2024: நாடே எதிர்பார்த்து காத்திருக்கும் 18வது மக்களவைத் தேர்தலில் பதிவான தபால் வாக்குகளை எண்ணும்பணி தொடங்கியது. அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் தபால் வாக்குகள் செலுத்தப்பட்ட பெட்டிகளில் சீல் அகற்றப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இன்னும் சற்றுநேரத்தில் EVM இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும்.
18வது மக்களவையின் முடிவுகள் (லோக்சபா தேர்தல் முடிவுகள் 2024) இன்று வெளியாகும். 542 தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கை பல சுற்றுகள் அல்லது நிலைகளில் செய்யப்படுகிறது. வாக்குகளை எண்ணும் செயல்முறை RO எனப்படும் தேர்தல் அதிகாரியால் செய்யப்படுகிறது.
வாக்கு எண்ணும் மையத்தில் 7 முதல் 14 மேஜைகள் அமைக்கப்பட்டு, அங்கு வாக்கு எண்ணும் முகவர்கள் மூலம் எண்ணிக்கை நடைபெறும். சிறிது தொலைவு இடைவெளியில் தடுப்புக்கு அப்பால் வேட்பாளர்களின் முகவர்கள் நின்று இதைப் பார்க்க அனுமதிக்கப்படுவர். முதலில் தபால் வாக்குகள் பிரிக்கப்பட்டு எண்ணப்படும். அதன்பிறகு அரை மணி நேரம் கழித்து EVM இயந்திரம் சீல் அகற்றப்பட்டு, வேட்பாளர்களின் முகவர்களிடம் காட்டிய பிறகு வாக்குகள் எண்ணப்படும்.
வாக்கு எண்ணும் முகவர்கள், அப்பணி முடிந்து ரிசல்ட் வெளிவரும் வரை வெளியே செல்ல அனுமதி கிடையாது. ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் உரிய ஒப்புதல் பெற்று அங்குள்ள போர்டில் முகவர்கள் எழுதுவர். இதுபோல் அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டு, வெற்றி பெற்றோரின் விவரம் படிவம் 40ல் எழுதப்படும். அதற்கு கண்காணிப்பாளர் ஆட்சேபனை இல்லை (NOC) என்ற சான்று அளித்ததும் முடிவு சத்தமாக அறிவிக்கப்படும்.
மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சியமைக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான கருத்து கணிப்புகளில் பாஜக கூட்டணி 350-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
அந்தவகையில் உலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியாவின் 18வது மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியுள்ளது. முன்னதாக லோக்சபா தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள் வந்துள்ளன. லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளில், எக்சிட் போல் முடிவுகள் எவ்வளவு துல்லியமானது என்பது தெரியவரும்.
Readmore: அலெர்ட்!… இன்றுதான் கடைசி!… Google Pay செயல்படாது!… காரணம் இதோ!