fbpx

Manjolai | மனம் மயக்கும் மாஞ்சோலை பற்றி உங்களுக்கு தெரியுமா? வாங்க ஒரு ரவுண்டு போகலாம்..!!

கோடைக்காலத்தில் நாம் ஊட்டி, கொடைக்கானல், இந்த இரண்டு ஊர்களை மட்டும்தான் மையப்படுத்தி பெரும்பாலானோர் சுற்றுலா செல்வோம். ஆனால் அங்கு சென்ற பிறகுதான் தெரியும் தங்கும் இடத்திலிருந்து எல்லா இடங்களிலும் மையங்களிலும் சுற்றுலாப் பயணிகள் நிரம்பி வழிவார்கள். 

ஆஹா வேறு எங்காவது சென்றிருக்கலாமே அமைதியாக அழகாக கோடைக் காலத்தில் பயணத்தை அனுபவித்து விட்டு வரலாமே என்று நீங்கள் வருத்தப்படுவீர்கள். ஆனால் திருநெல்வேலி மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அழகான மலையாக மாஞ்சோலை உள்ளது. மாஞ்சோலையில் இயற்கை அழகின் அருமைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

திருநெல்வேலியிலிருந்து சுமார் 70 கி.மீட்டர் தூரத்தில் உள்ள இந்த மாஞ்சோலை வருடம் தோறும் தண்ணீர் விழும் மணிமுத்தாறு நீர்வீழ்ச்சிக்கு மேலே மலைப்பகுதியில் அமைந்துள்ளது. மாஞ்சோலை அழகான வானிலைக்கு புகழ் பெற்றது. இங்கு இயற்கை எழில் சூழ்ந்த தேயிலை தோட்டங்கள், நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் நிறைந்து காணப்படுகின்றது.

மொத்தத்தில் மாஞ்சோலை மலை ஊட்டி,கொடைக்கானல் போல புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு குளிர் பிரதேசமாக விளங்கும் என்பதில் ஐயமில்லை . ஒரு வரவேற்பு கம்பளம் போல அமைக்கப்பட்ட மரகத பச்சை தேயிலை தோட்டங்களின் பனோரமாவைப் பார்த்தால் உங்களுக்கு மனதில் ஒருவித மகிழ்ச்சி பொங்கி வழியும்.

சுற்றியுள்ள மலைகள் மற்றும் காடுகளின் சில அற்புதமான காட்சிகளை நீங்கள் ரசிக்கக்கூடிய பல வாய்ப்புகள் இங்கு உள்ளது. நீர்வீழ்ச்சிகள், பச்சை பசேல் புல்வெளிகள் மற்றும் அடர்ந்த காடு ஆகியவை இயற்கை காதலர்களின் கனவை நனவாக்குகிறது. இந்த மாஞ்சோலை பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்கள் வழியாக நாம் நடந்து சென்றாலே ஒட்டு மொத்த இயற்கை அழகையும் ரசிக்க முடியும் என்பதில் சிறிதளவும் ஐயப்பாடு இல்லை.

அமைதியான சூழ்நிலையில் தங்க விரும்பும் அனைவரும் நிச்சயம் காண வேண்டிய இடமாக இந்த மாஞ்சோலை விளங்குகிறது. மாஞ்சோலை சுமார் 1162 மீட்டர் உயரத்தில் உள்ள மலை ஆகும். இந்த இடம் தேயிலைத் தோட்டங்களுக்குப் பிரபலமானது, அவற்றில் பம்பாய் பர்மா தேயிலைத் தோட்டம் மிக முக்கியமானது. அதன் அழகிய அழகு காரணமாக, இந்த இடம் ஊட்டிக்கு இணையான அந்தஸ்தை பெறுகிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மணிமுத்தாறு அணை, மணிமுத்தாறு நீர்வீழ்ச்சி ஆகியவற்றை வரும் வழியில் கண்டு மகிழலாம்.

இங்கிருந்தபடியே மணிமுத்தாறு நீர்வீழ்ச்சி, மணிமுத்தாறு அணை மற்றும் பாபநாசம் (காரையார்) அணை ஆகியவற்றின் அழகை தூரத்திலிருந்து கண்டு ரசிக்க முடியும். களக்காடு – முண்டந்துறை புலிகள் சரணாலயத்தின் ஒரு அழகான பகுதியாக விளங்கும் இந்த மாஞ்சோலையில் வனவிலங்கு பிரியர்களைக் கவர்ந்திழுக்கும் வகையில் யானைகள், கரடிகள், காட்டெருமை, காட்டுப்பன்றி மற்றும் சாம்பார் மான் ஆகிய விலங்குகள் வாழ்கின்றன. அவற்றையும் கண்டு ரசிக்கலாம். மொத்தத்தில் இந்த மாஞ்சோலை பயணம் ஒருவருக்கு மிகவும் சுவாரசியமான அனுபவங்களைத் தரும் என்று உறுதியாக நம்பலாம்.

அங்குச் சாப்பிட உணவு கிடைக்கும், ஆனால் முன்கூட்டியே முன்பதிவு செய்ய வேண்டும். குதிரைவெட்டியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையிலும், மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதியிலும் தங்குமிடம் கிடைக்கும் . அதற்கும் முன்பே முன்பதிவு செய்ய வேண்டும். விருந்தினர் மாளிகையின் பின்னால் உள்ள மைதானம் சாம்பார் மான், காட்டுப்பன்றிகள் மற்றும் கரடிகளைக் கண்டு ரசிக்கும் ஒரு நல்ல இடமாக இருக்கும்.

இவற்றுடன் மலைக்கு மேலே கண்டு ரசிக்கக் கோதையாறு, குதிரைவெட்டி, நாலுமுக்கு மற்றும் ஊத்து போன்ற இடங்களும் உள்ளன. இங்கு செல்ல வனத்துறையிடம் அனுமதி வாங்க வேண்டும். அவர்கள் கூறும் கட்டுப்பாட்டின் பெயரிலேயே சுற்றுலா பயணிகள் சென்று வர முடியும். இனி டூர் பிளான் போட்டீங்கன்னா கண்டிப்பாக மாஞ்சோலை செல்லுங்கள். மிஸ் பண்ணிடாதீங்க..

Read more ; முட்டை சாப்பிடுவதை திடீரென நிறுத்தபோறீங்களா?… அப்ப இந்த பதிவு உங்களுக்குத்தான்!!

English Summary

In summer, most of us visit Ooty and Kodaikanal, focusing on these two towns. But it is only after getting there that the centers are overrun with tourists from the accommodation.

Next Post

பெரும் சோகம்!… உலகின் மிகப்பெரிய ஃபிலிம் சிட்டி தலைவர் ராமோஜி ராவ் காலமானார்!

Sat Jun 8 , 2024
Ramoji Rao (87), head of the world's biggest film city and founder of Enadu magazine, passed away due to ill health.

You May Like