தமிழ்நாட்டில் வரும் ஜூன் 15ஆம் தேதி முதல், தானியங்கி முறையில் பட்டா பெயர் மாற்றம் செய்யும் திட்டம் முழுமையாக அமலுக்கு வருகிறது.
தமிழ்நாட்டில் பத்திரப்பதிவு மற்றும் பட்டா மாறுதல் விவகாரங்களில் திமுக அரசு பல்வேறு சீர்திருத்தங்களை செய்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் வரும் ஜூன் 15ஆம் தேதி முதல், தானியங்கி முறையில் பட்டா பெயர் மாற்றும் செய்யும் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட உள்ளதாக வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், பொதுமக்களுக்கு நிறைய நன்மைகள் உள்ளது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் பட்டா மாறுதல் தொடர்பான தகவல்கள் கிரையம் கொடுப்பவருக்கும், கிரையம் பெறுபவருக்கும் எஸ்எம்எஸ் வாயிலாக அனுப்பப்படும்.
நீங்கள் பத்திரப் பதிவுத்துறையில் பதிவு செய்யும் சொத்து விவரங்களின் அடிப்படையில் தான் தானியங்கி முறையில் ஆன்லைன் பட்டா மாறுதல் நடைபெற இருக்கிறது. இதனால், ஒரு வாரத்திற்குள் சம்பந்தப்பட்ட நபருக்கு பட்டா கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த புதிய நடைமுறையின் படி, வாங்கப்படும் சொத்தின் ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் இது தொடர்பான தகவல்களை பதிவுத்துறையே வருவாய்துறைக்கு தெரிவித்துவிடும். பதிவுத்துறை அளிக்கும் தகவலின்படியே பட்டா வழங்கப்பட்டு வருகிறது. இப்போது தானியங்கி முறையிலும் பதிவுத்துறை அளிக்கும் தகவலின்படி, பட்டா பெயர் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி அதிகாரிகள் கூறுகையில், பதிவுத்துறைத் தலைவரின் அறிவுரையின் படி, 100% தானியங்கி முறையில் பட்டா பெயர் மாற்றம் செய்ய ஜூன் 15ஆம் தேதி முதல் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனை செயல்படுத்த பத்திரப் பதிவுக்கு பின்பு இணையவழியில் மேற்கொள்ளப்படும் பட்டா மாறுதல் தொடர்பான தகவல்கள் அனைத்தும் சம்மந்தப்பட்ட நில அளவர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோரிடம் இருந்து குறுஞ்செய்தி (SMS) வாயிலாக கிரையம் கொடுப்பவர், பெறுபவர் இருவருக்கும் தெரிவிக்க உள்ளோம்” என்று தெரிவித்தனர்.
Read More : அரசு ஊழியர்களுக்கு பணம் கொட்டப்போகுது..!! மிகப்பெரிய ஜாக்பாட்டை அறிவிக்கும் மோடி அரசு..!!