ஆதார் இந்தியாவில் மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. உங்கள் வங்கிக் கணக்குகள் தொடங்குவது முதல் அனைத்திற்கும் ஆதார் என்பது அவசியம். அரசாங்கம் வழங்கும் பல்வேறு சேவைகளுக்கு கட்டாய ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
நாம் அனைவரும் சிறு வயதில் இருக்கும் பொழுது எடுக்கப்பட்ட ஆதார் அட்டையில் புகைப்படங்கள் மிகவும் பழமையானதாக இருக்கும்.. இதனால் சில நேரங்களில் நம்முடைய முக அடையாளங்கள் மற்றவர்களால் கண்டுபிடிக்க முடியாத சூழல் உருவாகிவிடுகிறது.. எனவே, ஆதார் அட்டையில் உள்ள புகைப்படத்தை எவ்வாறு மாற்றிக் கொள்ளலாம் என்பதை பார்க்கலாம்.
எப்படி புதுபிப்பது…?
- முதலில், நீங்கள் UIDAI என்னும் ஆதாரின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும்.
- பின்னர் ஆதார் அட்டை தகவல்களை புதுப்பிக்கும் திருத்த படிவத்தை Download செய்ய வேண்டும்.
- அடுத்ததாக நீங்கள் அனைத்து தகவல்களும் படிவத்தில் நிரப்பப்பட வேண்டும்.
- படிவத்தை பூர்த்தி செய்த பிறகு, ஆதார் அட்டை தகவல்களை புதுப்பிப்புக்காக UIDAI பிராந்திய அலுவலகத்திற்கு ஒரு கடிதம் எழுதி, அதில், சுய சான்று அளிக்கப்பட்ட படத்தை இணைத்து அனுப்ப வேண்டும்.
- இதை முடித்த பிறகு இரண்டு வாரங்களுக்குள் புதிய புகைப்படங்களுடன் ஆதார் அட்டை உங்களுக்கு கிடைக்கும்.
Read more ; ‘கிரெடிட் கார்டு’ தொகையை செலுத்த தவறினால் என்ன நடக்கும் தெரியுமா..? முழு விவரம் இதோ..!!