fbpx

உஷார்..!! ஓரினச்சேர்க்கை இளைஞரை கதறவிட்ட 17 வயது சிறுவன்..!! மொத்தத்தையும் அடிச்சிட்டு போய்டாங்களே..!!

ஓரினச்சேர்க்கைக்கு தனிமையில் சந்திக்க ஆசைப்படும் இளைஞர்களை குறிவைத்து பணம் பறித்து மோசடிகள் அரங்கேறுகின்றன. அப்படித்தான் கோவை துடியலூர் கவுண்டர் மில்ஸ் சேரன் நகரில் ஓரினச்சேர்க்கையாளர் ஆப் மூலம் பழகி இளைஞரை தனிமையில் சந்திக்கப்பட்ட இளைஞரிடம் சிறுவன் ஒருவர் பீர் பாட்டிலை வைத்து பணம், செல்போன், பைக் என அனைத்தையும் பறித்துள்ளான்.

கோவை மாவட்டம் துடியலூர் அருகே 25 வயது இளைஞர் வசித்து வருகிறார். அங்கு அறை எடுத்து தங்கியிருந்து தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஓரினச்சேர்க்கையாளர் ஆப் மூலம் இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் செல்போனில் அடிக்கடி பேசி வந்துள்ளனர். இந்நிலையில், சம்பவம் நடந்த அன்று இருவரும் துடியலூர் அருகே கவுண்டர் மில்ஸ் சேரன் நகரில் தனிமையில் சந்திக்க முடிவு செய்துள்ளனர்.

அங்கு 25 வயது இளைஞர் தனது இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது, அங்கு அவரை தனியாக வர சொன்னவருடன், மேலும் ஒருவர் இருந்தார். அவர்கள் இருவரும் திடீரென பீர்பாட்டிலை உடைத்து குத்திவிடுவதாக மிரட்டி 25 வயது இளைஞரின் பைக், செல்போன், ரூ.5,300 ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர். கனநிமிடத்தில் தனக்கு விபூதி அடித்த சிறுவர்களின் செயலால் கலங்கி போன அந்த இளைஞர், துடியலூர் போலீசில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். அதில் மோட்டார் சைக்கிள், செல்போன், பணம் பறித்தது திருச்சியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் மற்றும் நெல்லையை சேர்ந்த அய்யப்பன் என்ற இளைஞர் ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் 17 வயது சிறுவனை கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள அய்யப்பனை வலைவீசி தேடி வருகின்றனர்.

Read More : ஆதார் கார்டு வாங்கப்போறீங்களா..? இதுதான் பெஸ்ட்..!! UIDAI வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!!

English Summary

A boy who met the young man alone put a bottle of beer on the young man and stole everything like money, mobile phone and bike.

Chella

Next Post

மாஸ் இயக்குனருடன் கூட்டணி வைத்த லெஜெண்ட் சரவணன்..!! எதிர்பார்ப்பை எகிறவைக்கும் அறிவிப்பு..!!

Mon Jun 24 , 2024
The news that legend Saravanan is going to team up with a famous director has been received by the fans.

You May Like