கள்ளக்காதலை தட்டிக்கேட்ட மாமியாரை கள்ளக்காதலனுடன் சேர்ந்து அடித்துக் கொன்று மருமகள் தீவைத்து எரித்த சம்பவம் கிருஷ்ணகிரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை அடுத்த கரியபெருமாள் வலசை கிராமத்தை சேர்ந்தவர் அலமேலு (48). இவருக்கு ஏழுமலை (20), சேட்டு (18) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அலமேலுவின் அண்ணன் மகளான பவித்ராவை (20) ஏழுமலைக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இவர்களுக்கு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில், பக்கத்து வீட்டில் குடியிருக்கும் மணிகண்டன் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவருக்கும் பவித்ராவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதற்கிடையே, இந்த கள்ளக்காதல் விவகாரம் மாமியாருக்கு தெரியவந்ததை அடுத்து இருவரையும் கண்டித்துள்ளார். ஆனாலும், இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கள்ளக்காதலை தொடர்ந்துள்ளார். சம்பவத்தன்று காலையும் இதுதொடர்பாக மாமியார்-மருமகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் ஆடு மேய்க்க சென்ற பவித்ரா, நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இதனால் சந்தேகமடைந்த மாமியார், மருகளை தேடிச் சென்றுள்ளார். அப்போது, பவித்ராவும், மணிகண்டனும் உல்லாசமாக இருந்துள்ளனர். இதனால், மாமியார் தகாத வார்த்தையால் திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் மற்றும் பவித்ரா இருவரும் சேர்ந்து அலமேலுவை அடித்து கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர். பின்னர் இருவரும் அலுமேலுவின் உடலை பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு எதுவும் தெரியாதது போல வீட்டுக்கு சென்றுள்ளனர்.
இதற்கிடையே, நீண்ட நேரமாகியும் தாய் வீடு திரும்பததால் அதிர்ச்சியடைந்த 2-வது மகன், நண்பர்களுடன் சேர்ந்து பல்வேறு இடங்களில் தேடியுள்ளார். அப்போது தனியார் நிலத்தில் பாதி உடல் எரிந்த நிலையில் அலமேலு கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக ஊத்தங்கரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து அலமேலுவின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது சந்தேகத்தின் பேரில் பவித்ராவை பிடித்து விசாரணை நடத்திய போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதையடுத்து, கிடுக்குப்பிடி விசாரணையில் கள்ளக்காதலன் மணிகண்டன், அலமேலுவை கழுத்தை நெரித்து கொலை செய்து தீ வைத்து எரித்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
Read More : சென்னையில் பிரபல ஐடி நிறுவனத்தில் கொட்டிக் கிடக்கும் வேலை..!! சம்பளம் எவ்வளவு தெரியுமா..?