fbpx

மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்..!! தவெக தலைவர் விஜய்க்கு சீமான் வாழ்த்து..!!

தமிழ்நாடு முழுவதும் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவ – மாணவியரை அழைத்து, பாராட்டுச் சான்றிதழுடன், உயர்கல்விக்கான உதவித்தொகை வழங்கும் தவெக தலைவர் விஜய்க்கு சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடப்பாண்டு 10, 12ஆம் வகுப்பில் தொகுதி வாரியாக முதல் 3 இடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு விஜய் பாராட்டு விழா நடத்துகிறார். இன்று நடக்கும் நிகழ்ச்சியில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, புதுக்கோட்டை, அரியலூர், கோவை, ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை, ஈரோடு, தேனி, தருமபுரி, கரூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெறுகிறது. பிற மாவட்ட மாணவ, மாணவியர்களுக்கு ஜூலை 3ஆம் தேதி பாராட்டு விழா நடைபெறுகிறது. மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் ரூ. 5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “கல்வி என்பது மானுட உரிமை! அதைக் கொடுக்க மறுப்பது மாபெரும் கொடுமை; கல்வியை அனைவருக்கும் தரமாக, சரியாக, சமமாக வழங்க வேண்டியது ஒரு நல்ல அரசின் தலையாயக் கடமை! ஆனால், தற்காலச்சூழலில் கல்வி என்பது தனியார் மயமாக்கப்பட்டு, மதிப்புக் கூட்டப்பட்ட விற்பனை பண்டம்போல, கல்விக் கட்டணம் என்ற பெயரில் பெரும் பகற்கொள்ளை நடக்கின்றது.

‘பணம் படைத்தவர்களால் மட்டுமே தரமான கல்வியைப் பெற முடியும், ஏழைகளுக்கு நல்ல கல்வி என்பது எட்டாக்கனி’ எனும் ஏற்றத்தாழ்வு மிகுந்த சமகாலத்தில், ஏழை – பணக்காரர் என்ற எவ்வித பாகுபாடுமின்றி, தமிழ்நாடு முழுவதும் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவ – மாணவியரை அழைத்து, பாராட்டுச் சான்றிதழுடன், உயர்கல்விக்கான உதவித்தொகையும் வழங்கி ஊக்கப்படுத்துகின்ற உன்னதப்பணியைச் செய்யும், என்னுயிர் இளவல், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர், என் அன்புத்தளபதி விஜய் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.

Read More : ’நீட் விலக்கு சட்டமுன்வடிவுக்கு உடனடியாக ஒப்புதல்’..!! சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டு வந்தர் முதல்வர்..!!

English Summary

Seeman congratulated Thaveka Chairman Vijay who invited students who are excelling in education across Tamil Nadu and gave certificates of appreciation and scholarships for higher education.

Chella

Next Post

TVK Vijay | டாப் 10 மாணவிகளுக்கு விலையுயர்ந்த பரிசை வழங்கிய விஜய்..!! என்ன தெரியுமா..?

Fri Jun 28 , 2024
Actor Vijay presented expensive prizes to 10 students at the academic award ceremony for 10th and 12th class students.

You May Like