fbpx

பயங்கரவாத சுரங்கப்பாதை அழிப்பு!. 100 க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்!.

100 terrorists killed: மத்திய காசா பகுதியில் ஒரு கிலோமீட்டர் நீளமுள்ள பயங்கரவாத சுரங்கப்பாதை அழிக்கப்பட்டு, சுமார் 100 பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) தெரிவித்துள்ளது.

மத்திய காசா பகுதியில் கடந்த சில நாட்களாக பயங்கரவாதிகளுக்கும் காலாட்படை பிரிவினருக்குமிடையே சண்டை நடந்து வருகிறது. இந்தநிலையில், அப்பகுதியில் உள்ள சுரங்கப்பாதையில் பல்வேறு இடங்களுக்கு செல்லும் வகையில் பயங்கரவாதிகளின் மறைவிடமாக கிளைகளை அமைந்துள்ளனர். மேலும் இதில், ஆயுதங்கள் சேமிப்பு வசதிகள், கண்காணிப்பு நிலையங்கள், ராக்கெட் ஏவுகணைகள் பதுக்கிவைத்து தாக்குதலில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்தநிலையில், காலாட்படை பிரிவினரால் 100 க்கும் மேற்பட்ட பயங்கரவாத கட்டமைப்புகள் அழிக்கப்பட்டன. மேலும், இந்த நடவடிக்கையில், சுமார் 100 பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) தெரிவித்துள்ளது.

Readmore: புதிய கோவிட்-19 அலை!. அதிகரிக்கும் வழக்குகள்!. மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்!.

English Summary

Destruction of terrorist tunnels! More than 100 terrorists were killed!

Kokila

Next Post

இந்தியாவில் கல்யாணத்துக்கு இவ்வளவு செலவா? அமெரிக்காவை விட அதிகமாம்!! - ஆய்வில் வெளியான தகவல்

Tue Jul 2 , 2024
A study conducted by a US-based firm revealed that Indians spend more on marriage than on food and education.

You May Like