fbpx

’மக்களே நம்புங்க’..!! ’அவுங்க என் பொண்டாட்டி இல்ல’..!! அம்பிகா உடனான உறவு குறித்து உண்மையை போட்டுடைத்த பிரபலம்..!!

80ஸ் எவர்கீரீன் நடிகைகள் என்றவுடன் அதில் கண்டிப்பாக அம்பிகா பெயர் இருக்கும். ரஜினி, கமல், சத்யராஜ் என தமிழ் சினிமாவில் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். தற்போது இவர், சீரியல்களில் நடித்து வருகிறார். இதற்கிடையே, ஒரு சில காலகட்டத்தில் அம்பிகா வாய்ப்பில்லாமல் 2-வது நாயகியாக நடிக்க ஆரம்பித்தார். பின்னர் 1988இல் பிரேம் குமார் மோகனை திருமணம் செய்து 8 ஆண்டுகள் கழித்து கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்.

இதையடுத்து, 6 ஆண்டுகளுக்கு பின்னர் 2000இல் ரவிகாந்த் என்பவரை திருமணம் செய்து 2 ஆண்டுகளில் அவரையும் விவாகரத்து பெற்று பிரிந்தார் என்று கூறப்பட்டு வந்தது. தற்போது தன் பிள்ளைகளுடன் தனியாக வசித்து வரும் அம்பிகா, சீரியல்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், என்னை அம்பிகாவின் கணவர் என்று கூறி வருகின்றனர் என்று நடிகர் ரவிகாந்த் முதன்முதலாக ஒரு தகவலை கூறி பல வருட வதந்திகளுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

அதாவது, சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் என்னைப் பற்றி பல வதந்திகள் வெளியாகிறது. என்னை அம்பிகாவின் கணவர் என்று செய்திகள் வெளியானது. நானும், அம்பிகாவும் 4 மொழிகளில் கிட்டத்தட்ட 16 படங்களில் கணவன் மனைவியாக நடித்து இருக்கிறோம். எங்களுடைய வீடு பக்கத்து பக்கத்து வீடு அதுக்கு எதுக்கு ரெண்டு வண்டியில போகணும் என்று ஒரே வண்டியில் போவோம். செட்டுக்கு ஒன்றாக போனதும் செட்டில் புருஷனும் பொண்டாட்டியும் வந்துட்டாங்க ஷாட்டுக்கு போலாம்னு சொல்லுவாங்க.

இதை பார்க்கிறவர்கள் என்ன நினைப்பார்கள் அதுதான் நடக்கிறது. அந்த பொண்ணு பாவம் அமெரிக்காவில் பிரேம்குமார் மோகன் என்பவரை திருமணம் செய்து 2 மகன்களை பெற்று நிம்மதியாக அங்க இருக்காங்க. சீன் வரும் போது இங்கு வந்து நடிச்சிட்டு போவாங்க. இதுதான் உண்மை தயவு செய்து சோசியல் மீடியாவில் வரும் செய்திகளை யாரும் நம்ப வேண்டாம்” என்று ரவிகாந்த் தெரிவித்துள்ளார்.

Read More : அடிக்கடி உல்லாச டார்ச்சர்..!! பொறுமையை இழந்த இளம்பெண்..!! கள்ளக்காதலன் போலீசில் சிக்கியது எப்படி..?

English Summary

There were reports that I am Ambika’s husband. Ambika and I have acted as husband and wife in almost 16 films in 4 languages.

Chella

Next Post

இது வெறும் ட்ரைலர்... அடுத்த 20 ஆண்டுகள் எங்களுடைய ஆட்சி தான்..!! - பிரதமர் மோடி சூளுரை

Wed Jul 3 , 2024
PM Modi has said that the BJP will rule the country for the next 20 years.

You May Like