fbpx

பழிக்கு பழி..!! ஆம்ஸ்ட்ராங் கொலையின் அதிரவைக்கும் பின்னணி..!! போலீசார் கூறும் அதிர்ச்சி தகவல்..!!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூரில் புதிதாக கட்டப்படும் அவரது வீடு அருகே மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல், அவரை கழுத்து, தலை ஆகிய இடங்களில் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடினர். இந்நிலையில், அவர் கொலை செய்யப்பட்டது ஏன் என்பது குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், ”ஆம்ஸ்ட்ராங் தினமும் இரவு தூங்கச்செல்வதற்கு முன்பு தனது நண்பர்கள் மற்றும் கட்சியை சேர்ந்தவர்களோடு தனது வீடு அருகே நின்று பேசிக்கொண்டிருப்பார். குறிப்பாக, அரசியல் நிலவரங்கள் குறித்து பேசுவார். அவ்வாறு நேற்று பேசிக்கொண்டிருக்கும்போதுதான் அவர் வெட்டிக் கொல்லப்பட்டார். கொலையாளிகளை பிடிக்க அங்கிருந்த அவர்களது நண்பர்களும், கட்சியினரும் விரட்டிச் சென்றுள்ளனர். ஆனால், அவர்கள் தப்பியோடிவிட்டனர்.

ஆம்ஸ்ட்ராங்கை உடனடியாக ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். ஆம்ஸ்ட்ராங் உடல் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் வக்கீலுக்கு படித்தவர். அவர் எப்போதும் வெள்ளை நிற பேண்ட், சட்டைதான் அணிந்திருப்பார். 2000ஆம் ஆண்டு முதல் தீவிர அரசியலில் இறங்கினார்.

2006 மாநகராட்சி கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பல்வேறு வழக்குகளில் சிக்கிய அவர், கடும் சட்டப்போராட்டம் நடத்தி பின்னர் அந்த வழக்குகளில் இருந்து விடுதலை பெற்றார்.. இதனால், அவருக்கு எப்போதும் கொலை மிரட்டல்கள் இருந்தவாறு இருந்தது. முன்விரோதம் காரணமாகவே அவர் கொலை செய்யப்பட்டிருக்க வேண்டுமென கருதுகிறோம். 2023ஆம் ஆண்டு நடந்த ஒரு சம்பவத்திற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த கொலை சம்பவம் அரங்கேறியிருக்கலாம். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம்.

ஆம்ஸ்ட்ராங் அவரது கட்சியின் அகில இந்திய தலைவியும், உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சருமான மாயாவதியை வைத்து சென்னை அமைந்தகரையில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தை நடத்தினார். அதன் பிறகுதான் அவர் புகழ்பெற்றார். அவருக்கு எதிரிகளும் அதிகமானார்கள்” என்று போலீசார் தரப்பு கூறியுள்ளது.

Read More : ஆடையை தூக்கி மார்பகங்களைக் காட்டிய பெண் அமைச்சர்..!! பிரதமர் உள்பட பலரும் பாராட்டு..!!

English Summary

Exciting information has emerged as to why Armstrong was murdered.

Chella

Next Post

”உண்மையான குற்றவாளியை கைது பண்ணுங்க”..!! ஆம்ஸ்ட்ராங்கின் உடலை வாங்க மறுத்து ஆதரவாளர்கள் போராட்டம்..!!

Sat Jul 6 , 2024
Armstrong's supporters staged a protest in front of the hospital saying that they will not buy the body until the real culprits responsible for his murder are arrested.

You May Like