fbpx

5000, 10,000 ஆயிரம் கோடிகளை விட்டுவிட்டு விஜய் அரசியலுக்கு வந்துள்ளார்..!! 2026இல் அவர் தான் முதல்வர்..!! சூளுரைத்த புஸ்ஸி ஆனந்த்..!!

”தளபதியை 2026இல் தமிழ்நாட்டின் முதல்வராக அமர வைக்க வேண்டும்” என்று பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சூளுரைத்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளரும் கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவருமான பரணி பாலாஜி என்பவரின் இல்ல மஞ்சள் நீராட்டு விழாவுக்கு தவெக கட்சி மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வருகை தந்தார். அப்போது, நிகழ்ச்சியில் பேசிய அவர், “5000, 10,000 ஆயிரம் கோடிகளை விட்டுவிட்டு ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் வைப்பது பல மொழி. ஆனால், பல கோடிகளை விட்டுவிட்டு மக்களுக்காக சேவை செய்ய அரசியலில் வந்திருக்கிறார் தளபதி விஜய்.

எல்லாருக்கும் ஒரு நாள் மட்டும் தான் பிறந்தநாள் வரும். அதை ஒரு வாரம், பத்து நாள் கொண்டாடுவாங்க, ஆனால் தளபதியின் பிறந்தநாளை மட்டும் தான் வருடம் 365 நாளும் கொண்டாடுகிறோம். ஒரு வருடம் அல்லது இரண்டு வருடமாக நலத்திட்ட உதவிகள் செய்யவில்லை. 30 வருடங்களாக ஏழைகளுக்கு தேவையான உதவிகளை செய்துக்கொண்டிருக்கும் கட்சி தமிழக வெற்றிக் கழகம். தளபதி என்று சொன்னாலே நமக்கு எனர்ஜி கிடைக்கும். அந்த தளபதியை 2026இல் தமிழ்நாட்டின் முதல்வராக அமர வைக்க வேண்டும்” என்றார். புஸ்ஸி ஆனந்த் பேச்சால் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் பூரித்து போனார்கள்.

Read More : விவசாயிகளுக்கு குட் நியூஸ்..!! இன்று முதல் இலவசமாக மண் எடுக்கலாம்..!! எப்படி விண்ணப்பிப்பது..?

English Summary

“Thalapathy Vijay should be made the Chief Minister of Tamil Nadu in 2026,” General Secretary Bussi Anand said.

Chella

Next Post

'உதட்டில் முத்தம் கொடுத்தால் ஆபத்து' - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!

Mon Jul 8 , 2024
"Kiss disease" is a type of viral infection. It is a disease that mostly affects young people. The reason for this is that young people kiss a lot.

You May Like