fbpx

காமெடி நடிகர் பாவா லக்ஷ்மணனுக்கு மாதந்தோறும் ரூ.15,000 அனுப்பும் பிரபல நடிகர்..!! யார் தெரியுமா..?

நடிகர் பாவா லக்ஷ்மணன் காமெடி நடிகராக பல ஹிட் காட்சிகளில் நடித்துள்ளார். குறிப்பாக, ’வாமா மின்னல்’ காமெடி பெரியளவில் அவரை பிரபலம் ஆக்கியது. கோவை பிரதர்ஸ் உள்ளிட்ட பல படங்களில் அவர் வடிவேலு உடன் காமெடி காட்சிகளில் நடித்து இருக்கிறார். இருப்பினும் சமீப காலமாக அவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. மேலும், அவர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், கால் விரல் ஒன்றும் அகற்றப்பட்டது.

அவர் மருத்துவமனையில் இருந்தபோது சிகிச்சைக்கு பணம் இல்லாமல் இருந்த நிலையில், அவருக்கு நடிகர் ஜீவாவின் அப்பா ஆர்.பி சவுத்ரி தான் உதவி செய்தாராம். சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தில் பாவா லக்ஷ்மணன் பல ஆண்டுகளாக மேலாளராக பணியாற்றியுள்ளார். அவர் வேலை செய்தபோது ஜீவா எல்கேஜி தான் படித்துக்கொண்டிருந்தாராம்.

தொடர்ந்து அவர்கள் நிறுவனத்தில் விஸ்வாசமாக பணியாற்றியதால் தான் தற்போதும் அவர்கள் எனக்கு உதவுகிறார்கள் என பாவா லக்ஷ்மணன் கூறியுள்ளார். மாதம்தோறும் ஜீவா ரூ.15,000-ஐ பாவா லக்ஷ்மணனுக்கு அனுப்பிவிடுகிறாராம். இந்த விஷயத்தை பாவா லக்ஷ்மணன் சமீபத்திய பேட்டியில் கூறியிருக்கிறார்.

Read More : உஷார்..!! சிறுவர், சிறுமிகளை பலாத்காரம் செய்து வீடியோ..!! இணையத்தில் வெளியிட்டு பணம் சம்பாதித்த இளைஞர்..!!

English Summary

Jiva sends Rs.15,000 to Bhava Lakshmana every month. Bhava Laxmanan has said this in a recent interview.

Chella

Next Post

'ராகுல் காந்தி-க்கு எதிரான சர்ச்சை பேச்சு' : பாஜக MLA மீது 8 வழக்குகள் பதிவு..!!

Wed Jul 10 , 2024
8 cases have been registered against Karnataka BJP MLA Bharat Shetty who said that Lok Sabha Leader of Opposition Rahul Gandhi should be slapped on the cheek in Parliament itself.

You May Like