fbpx

’கள்ளச்சாராய மரணங்களுக்கு ரூ.10 லட்சம் என்ன.. ரூ.20 லட்சம் கூட முதல்வர் கொடுப்பார்’..!! ’யாரும் தலையிட முடியாது’..!! சபாநாயகர் அப்பாவு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தனியார் பல் மருத்துவமனையை திறந்து வைத்தப் பின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த சபாநாயகர் அப்பாவு, “கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் கொடுத்துள்ளது குறித்த கேள்விக்கு, ரூ. 10 லட்சம் இல்லை.. 20 லட்சம் வேண்டுமானாலும் முதல்வர் கொடுப்பார். கொள்கை முடிவு எடுப்பது முதல்வரின் முடிவு. அதில் யாரும் தலையிட முடியாது

அதிமுக-வினர் சட்டசபையில் பேசுவது சிக்கல் என்று நினைக்கிறார்கள். அவர்களுக்கு என்ன பிரச்சனையோ தெரியவில்லை. நாங்கள் அவர்களும் உள்ளே இருந்து கருத்தை கூற வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால், அவர்கள் வெளிநடப்பு செய்துவிடுகின்றனர். அதி முக்கிய பிரச்சனைகளை அதிமுகவினர் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசலாம். வரும் காலங்களில் அவர்கள் அதிக நேரம் அமர்ந்து சட்டசபையில் பேச வேண்டும் என்பது தான் எங்கள் எண்ணம்” என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், சட்டம்-ஒழுங்கு பிரச்சனைக்கு, ஆங்காங்கே நடக்கும் சில கொலைகளை சுட்டிக்காட்டி அரசுக்கு எதிராக, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக இல்லை என்று கூறுகிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் நடப்பது சட்டம் ஒழுங்கு பிரச்சனை. ஆனால், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது” என்றார்.

Read More : ’திமுக என்றால் ஊழல், ஊழல் என்றால் திமுக’..!! 2026 அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்..? பொள்ளாச்சி ஜெயராமன் பரபரப்பு பேட்டி..!!

English Summary

Rs. Not 10 lakhs.. 20 lakhs will be given by the Chief Minister.

Chella

Next Post

2026 தேர்தலில் நாம் தமிழர் கட்சியுடன் அதிமுக கூட்டணி..? நிர்வாகிகள் கூட்டத்தில் நடந்தது என்ன..?

Fri Jul 12 , 2024
It has been reported that AIADMK executives have demanded an alliance with Naam Tamilar Party in the 2026 assembly elections.

You May Like