fbpx

தமிழ்நாட்டில் மின்சார கட்டணம் உயர்கிறதா..? தனியாருக்கு போகும் மின்சாரத்துறை..? வெளியான அதிர்ச்சி தகவல்..!!

தமிழ்நாடு மின்சார வாரியம் TANGEDCO இரண்டாகப் பிரிக்க மத்திய எரிசக்தி துறை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய எரிசக்தி துறை ஒப்புதல் அளித்ததை அடுத்து TANGEDCO இரண்டு கார்ப்பரேஷன் நிறுவனங்களாக பிரிக்கப்பட்டது. அதில் ஒன்று, தமிழ்நாடு பவர் ஜெனரேஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் TNPGCL ஆகவும், மற்றொன்று தமிழ்நாடு கிரீன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட் TNGECL ஆகவும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு மின்சார வாரியம் உற்பத்தி துறை, விநியோகத்துறை என இரண்டாக பிரிக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்புக்கு பலர் வரவேற்பு தெரிவித்தாலும் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வருங்காலத்தில் உற்பத்தி துறையை அரசு வைத்துக் கொண்டு, விநியோகம் செய்யும் துறையை தனியாருக்கு கொடுக்க வாய்ப்புள்ளதாகவும், அதற்காகத்தான் இரண்டாக பிரிக்கப்பட்டு இருப்பதாகவும் விமர்சனம் எழுந்துள்ளது. ஏற்கனவே சில மாநிலங்களில் மின்சார விநியோகம் தனியார் துறையில் இருப்பதால் மின் கட்டணம் மிக அதிக அளவில் இருப்பதாகவும், அதே நிலை தமிழ்நாட்டுக்கு வந்து விடும் ஆபத்து இருப்பதாகவும் சிலர் கூறுகின்றனர். ஆனால், இதெல்லாம் யூகத்தின் அடிப்படையில் வரும் தகவல் என்றும், தமிழ்நாடு மின்சார வாரியம் இரண்டாவது பிரிக்கப்பட்டது நிர்வாக காரணங்களுக்கு மட்டுமே என்று கூறப்பட்டு வருகிறது.

Read More : மனித உடலுறுப்புகள் விற்பனை..? மர்மமான முறையில் 100 பேரின் உடல்கள் அடக்கம்..!! நீலகிரியில் திடுக்கிடும் சம்பவம்..!!

English Summary

It has been reported that the Central Energy Department has approved the split of Tamil Nadu Electricity Board TANGEDCO into two.

Chella

Next Post

உங்கள் முகம் பளபளப்பாக முள்ளங்கியை இப்படி பயன்படுத்துங்கள்!. ஸ்கின் டிப்ஸ்!.

Sat Jul 13 , 2024
Use Radish like this to make your face glow! Skin Tips!

You May Like