ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு வருகை தந்த பிரபலங்கள் மீண்டும் இனைந்து எடுத்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது.
உலக கவனம் ஈர்க்கும் வகையில் முகேஷ் அம்பானி – நீட்ட அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில், பெரும் நட்சத்திரங்கள், சினிமா – விளையாட்டு – தொழில்துறை என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த திருமணத்தில் ஐஸ்வர்யா ராய் பச்சன் தனது மகள் ஆராத்யாவுடன் தனியாக வந்திருந்தார். அவரது கணவரும் நடிகருமான அபிஷேக் பச்சன் அவரது பெற்றோர் மற்றும் பழம்பெரும் நடிகர்களான அமிதாப் பச்சன் மற்றும் ஜெயா பச்சன் மற்றும் அவரது சகோதரி ஸ்வேதா பச்சன் நந்தா குடும்பத்தினருடன் வந்ததால் இது ரசிகர்களிடையே மிகப்பெரும் கேள்வியை எழுப்பியது.
இந்த நிலையில், ஐஸ்வர்யா ராய் பச்சன் சல்மான் கானுடன் போஸ் கொடுக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்கள் பழைய காதலை மீண்டும் தூண்டுவதாக சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், ஐஸ்வர்யா ராய் பச்சன் தனது மகளுடணும்னு, சல்மான் கான் தனது தங்கையுடனுமே புகைப்படம் எடுத்து கொண்டனர். ஆனால், சல்மான் கானுடன் ஐஸ்வர்யா ராய் கைக்கோர்த்து இருக்கும்படியான புகைப்படம் எடிட் செய்து பதிவிடப்பட்டுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது.
read more..டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு..!!முன்கூட்டியே கணித்த கார்டூன் சேனல்!!