fbpx

இத்தனை பேர் போலிச் சான்றிதழ்கள் மூலம் ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆனவர்களா? வெளியான பகீர் தகவல்!! உண்மை என்ன?

போலிச் சான்றிதழ்கள் மூலம் இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணியிடங்களைப் பலரும் பெற்றிருப்பதைத் தக்க சான்றுகளுடன் ஆயுஷ் சங்கி என்பவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்த செய்தி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

ஆசிஃப் கே யூசுப்

2020 ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான ஆசிஃப் கே யூசுப், பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கான (ஈடபிள்யூஎஸ்) இடஒதுக்கீட்டில், போலிச் சான்றிதழ் அளித்து ஐஏஎஸ் ஆகியுள்ளார். இவர் சமர்பித்த ஓபிசி என்சிஎல்(OBC NCL) சான்றிதழ் போலியானது என்று விசாரணையில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

அபிஷேக் சிங்

2010 ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான அபிஷேக் சிங், பொதுவாக நடமாடுவதில் குறைபாடு – லோகோமோட்டிவ் டிஸ்எபிலிட்டி – ஒதுக்கீட்டில் ஐஏஎஸ் ஆகியுள்ளார். ஆனால், அவருடைய சமூக வலைத்தளக் கணக்குகளிலேயே இந்தப் பிரச்சினை உள்ளவர்களால் செய்ய முடியாததையெல்லாம் செய்துகொண்டிருக்கும் படங்கள் இடம் பெற்றிருக்கின்றன.

அனு பெனிவால்

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கான (ஈடபிள்யூஎஸ்) இடஒதுக்கீட்டில் தேர்வு செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரியின் மகளான அனு பெனிவால், கடந்த 2021ஆம் ஆண்டு ஈடபிள்யூஎஸ் இடஒதுக்கீட்டில் ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐபிஎஸ் அதிகாரியின் மகள், ஈடபிள்யூஎஸ் இடஒதுக்கீட்டில் தேர்வானது முரணாக உள்ளது

நிகிதா கண்டேல்வால்

2014 ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான நிகிதா கண்டேல்வால், பார்வை குறைபாடு ஒதுக்கீட்டில் ஐஏஎஸ் அதிகாரி ஆகியுள்ளார். ஆனால், கண்ணாடி அணியாமல் அவர் ஓட்டுநர் உரிம தேர்வில் பங்கேற்ற வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்தப் பதிவில் தொடர்ந்து தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. மகாராஷ்டிரத்தில் ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேட்கர் நடவடிக்கைகளால் ஏற்பட்டுள்ள சர்ச்சையையும் தொடர்ந்து புதிது புதிதாகத் தகவல்கள் வெளிவரத் தொடங்கி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

பிரியன்ஹு காதி

2021 ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான பிரியன்ஹு காதி, எலும்பியல் குறைபாடு – ஆர்த்தோ ஹேண்டிகேப் – ஒதுக்கீட்டில் ஐஏஎஸ் அதிகாரி ஆகியுள்ளார். ஆனால், அவரை நேரில் கண்டுள்ள பலரும் பிரியன்ஹுவுக்கு எவ்வித குறைபாடுகளும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். அவரது சமூக ஊடக பதிவுகள் மூலமும் குறைபாடுகள் இல்லாதது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

Read more | ’என்னை கொல்ல 2 முறை சதி’..!! ’துப்பாக்கிகளுடன் கைது’..!! எலான் மஸ்க் சொன்ன அதிர்ச்சி தகவல்..!!

English Summary

IAS, IPS using reservation through fake certificates Ayush Sangi has posted on his X site with proof that many people have got the jobs. The news about this is spreading fast on the internet.

Next Post

’எனக்கு தெரிந்தது எல்லாம் சாப்பாடு, தண்ணீர், பொண்டாட்டி தான்’..!! வரலட்சுமியின் கணவர் நிக்கோலாய் சச்தேவ்..!!

Mon Jul 15 , 2024
"I know food, water and bondati in Tamil. I am trying to learn Tamil soon,” said Varalakshmi's husband Nikolai.

You May Like