நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பளார் சீமானுக்கு பெரிய அரசியல் நெருக்கடி ஒன்று ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் ஜெயலலிதா குறித்து சீமான் பேசியதே முதல் பிரச்சனைக்கு காரணம். ஜெயலலிதா, கருணாநிதி போன்ற தலைவர்களை தொடர்ச்சியாக ஏன் தலைவர்களை இழிவு செய்கிறீர்கள் என்ற கேள்விக்கு சீமான் சொன்ன பதிலில், ஜெயலலிதா 2 திராவிட தலைவர்களின் சமாதிக்கு நடுவில் படுத்திருந்தா ஆமா நடுவுல படுத்திருக்கு என்று தானே சொல்ல முடியும்? அது தப்பு என்றால் இனிமேல் சாஷ்டாங்கமாக விழுந்து கிடக்குதுன்னு சொல்றேன் என்கிறார்.
இந்த விவகாரத்தில் ஏற்கனவே சீமானை கடுமையாக விமர்சனம் செய்த அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி தற்போது இதில் புகாரும் அளித்துள்ளார். ஜெயலலிதா பற்றி தரக்குறைவாக பேசியதாக, சீமான் மீது அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அரசியல் ரீதியாக அவருக்கு இது புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
அதோடு இல்லாமல் கருணாநிதியை பற்றி இழிவாக பாடல் பாடிய நாம் தமிழர் கட்சியின் சாட்டை முருகனை கைது செய்து தனக்கு நெருக்கடி தருவதாக குற்றம் சாட்டிய சீமான், அதே பாடலை நான் பாடுகிறேன். என்னை கைது செய்துப் பாருங்கள் என்று மிக ஆவேசமாக சவால் விடுத்தார். இந்த விவகாரம் தற்போது புதிய கோணத்தை அடைந்து உள்ளது. சமீபத்தில் குற்றாலத்திற்கு குளிக்க வந்த சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக புகார் வைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பிரச்சார மேடையில் பேசியதற்காக கைது செய்யப்பட்டார். விக்கிரவாண்டியில் பிரச்சாரம் செய்ய சென்ற சாட்டை துரைமுருகன் முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோர் குறித்து அவதூறாக பேசினார். முதல்வரை கடுமையாக விமர்சனம் செய்து, கடுமையான சொற்களால் விமர்சனம் செய்தார். இதையடுத்து தான் அவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.
சீமானின் ஆவேசம் திமுக தொண்டர்கள் முதல் சீனியர்கள் வரை ரசிக்கவில்லை. அமைச்சர்கள் சேகர் பாபு, கீதா ஜீவன் போன்றோர் சீமானின் பேச்சைக் கண்டித்தனர். திமுகவை அரசியல் ரீதியாக யார் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம் ; அதற்கு நாம் பதிலடி தருவோம். ஆனால், கலைஞரை சீமான் இழிவாக பேசுவார , முடிந்தால் கைது செய்து பார்னு தெனாவெட்டாகப் பேசுவார். இருந்தும் நாம் சும்மா இருந்தால் எப்படி? அந்த ஆள் தான், கைது செய் கைது செய்யுன்னு சொல்லுறாரே? கைது செய்து சட்டத்தின் வலிமையை நாம் காட்ட வேண்டும். அதனால், கலைஞரை இழிவாகப் பேசிய அந்த நபரை கைது செய்யுங்கள்.
இல்லையெனில், தொண்டர்கள் ஆவேசப்படுவதை தடுக்க முடியாது. அப்படி ஆவேசப்பட்டால் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று தங்களின் கோபத்தை திமுக மா.செ.க்களும், மாவட்ட நிர்வாகிகளும். அறிவாலயத்துக்குத் தெரியப்படுத்தி வருகின்றனர். இதே கருத்தைத்தான் மூத்த தலைவர்களும் ஸ்டாலினிடம் வலியுறுத்தியுள்ளனர். இதனையடுத்து யோசிக்கத் தொடங்கியிருக்கிறாராம் ஸ்டாலின். மேலும், அதிகாரிகளிடம் இது பற்றி விவாதித்துள்ளாராம்.
Read More : புதிதாக இந்த தொழில் தொடங்கினால் அதிக லாபம் கிடைக்கும்..!! எப்படின்னு தெரிஞ்சிக்கோங்க..!!