fbpx

சற்றுமுன்…! ஆம்ஸ்ட்ராங் கொலை… மற்றொரு முக்கிய குற்றவாளியை பிடிக்க 5 தனிப்படை…!

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் சம்போ செந்திலை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம் தேதி அவரது வீட்டின் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ரெளடி ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை பாலு உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களை காவலில் எடுத்த விசாரிக்க அனுமதி கோரி போலீஸார் தாக்கல் செய்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம், 5 நாள்கள் அனுமதி வழங்கி உத்தரவிட்டது. இணை ஆணையா் விஜயகுமாா் தலைமையில் 10 தனிப்படையினா் 11 பேரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனா். குற்றவாளிகள் திருவேங்கடம் என்பவர் போலீசாரின் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இவ்வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதாக பிரபல ரவுடியின் மனைவியும், அ.தி.மு.க,. திருவல்லிக்கேணி மேற்கு பகுதி கழக துணை செயலாளரும் வழக்கறிஞருமான மலர்கொடி மற்றும் ஹரிஹரன் மற்றும் சதீஷ் என மூவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் நான்கு பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.போலீசார் விசாரணையில் தி.மு.க, வழக்கறிஞர் அருளுடன் மலர்க்கொடி தொடர்ச்சியாக தொலை பேசியில் பேசியது தெரியவந்துள்ளது.அதே போல கொலை வழக்கில் பாஜக நிர்வாகி மற்றும் அஞ்சலை என்பவருக்கு தொடர்பு உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. தலைமறைவாக உள்ள அஞ்சலையை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.

தற்போது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் வரும் மற்றொரு முக்கிய குற்றவாளியான சம்போ செந்திலை பிடிக்க போலீசார் 5 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 5 தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். சம்போ செந்திலுக்கு நெருக்கமான தொடர்புகள் குறித்தும், நெருங்கியவர்களை பிடித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

English Summary

Armstrong’s murder… Special team led by 5 police inspectors to nab another prime culprit

Vignesh

Next Post

கள்ளக்காதலியுடன் கட்டிலில் உல்லாசம்..!! சரியான நேரத்தில் என்ட்ரி கொடுத்த மனைவி..!! 2 பேரையும் வெளுத்து வாங்கிய வீடியோ..!!

Sat Jul 20 , 2024
Family Brutally Thrashes Cheating Husband Caught With Another Woman; Viral Video Draws Reaction

You May Like