fbpx

நேபாளத்தில் விமானம் தீப்பிடித்து எரிந்து விபத்து – பயணித்த 18 பேரும் உயிரிழப்பு..!!

நேபாலத்தில் விமானம் ரன்வேயில் விழுந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. விபத்தில் சிக்கிய விமானி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேபாளம் தலைநகர் காட்மண்டு அருகே 19 பேருடன் சென்ற பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது. விபத்துக்குள்ளான விமானம் சௌர்யா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமானது. காத்மாண்டுவில் இருந்து போக்காராவுக்கு இந்த விமானம் இன்று (புதன்கிழமை) காலை புறப்பட்ட போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

ஓடுதளத்தில் இருந்து வேகமாக மேலே எழ முயன்றதால் விபத்து நேர்ந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் கீழே விழுந்த உடனேயே விமானம் தீப்பற்றி எரியத் தொடங்கியதால் அதில் பயணித்த 19 பேரின் நிலை என்ன என்பது தெரியாமல் இருந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த படையினர் துரிதமாக மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் முதல்கட்டமாக 5 பேர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், தற்போது 19 பேர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கீழே விழுந்த விமானம் முற்றிலுமாக எரிந்து சாம்பலான காட்சிகளும் வெளியாகி பதைதைக்க வைக்கிறது.

Read more ; என்னை ஏமாற்றி கையெழுத்து..!! உயிரிழந்த மகன்..!! கதறி அழுத எலான் மஸ்க்..!! நடந்தது என்ன..?

English Summary

Death toll rises to 18 in Nepal plane crash

Next Post

தோனி விவசாயம் செய்வது இதற்கு தானா..? வருமான வரியில் இருந்து தப்பிக்க மாஸ்டர் பிளான்..!!

Wed Jul 24 , 2024
Netizens have started discussing why Dhoni, the former player of the Indian cricket team, is farming instead of doing other big business.

You May Like