fbpx

மாணவர்களே ரூ.1,000 வேண்டுமா..? ஆதார் எண் கட்டாயம்..!! தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் ”தமிழ் புதல்வன் திட்டம்” ஆகஸ்ட் மாதம் முதல்வர் முக.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்படவுள்ள நிலையில், இத்திட்டத்திற்கான வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”தமிழ் புதல்வன் திட்டத்தில் பயன்பெற ஆதார் எண் கட்டாயம். தகுதியான மாணவர்கள் ஆதார் எண் வைத்திருக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள கல்வி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இந்த தகவல் அனைத்து மாணவர்களுக்கும் தெரியும் வகையில் கல்வி நிறுவனங்கள் விளம்பரப்படுத்த வேண்டும்.

அருகில் உள்ள ஆதார் மையங்களுக்கு சென்று ஆதார் எண்ணை எடுக்க வேணடும் என்று மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். அந்த பகுதியில் ஆதார் மையம் இல்லாவிட்டால், சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் ஆதார் மையம் அமைத்து அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : “எப்போதும் போதையில் உலா வரும் சுறாக்கள்”..!! அதுவும் கொக்கைனாம்..!! விஞ்ஞானிகள் அதிர்ச்சி கண்டுபிடிப்பு..!!

English Summary

The Tamil Nadu government has announced that Aadhaar number is mandatory to avail the Tamil Putulvan scheme.

Chella

Next Post

விவசாயி வயிற்றில் 16 இன்ச் முழு சுரைக்காய்..!! அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய மருத்துவர்கள் குழு!!

Wed Jul 24 , 2024
Doctors extract 16-inch bottle gourd from farmer's rectum in Madhya Pradesh

You May Like